நெற்குணம் சிவன் விஷ்னு திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
நெற்குணம் சிவன் விஷ்னு திருக்கோயில், (பரிகார தலம்) நெற்குணம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603310.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ விஸ்வநாதர் / ஸ்ரீ கிருஷ்ணர் இறைவி: ஸ்ரீ விசாலாக்ஷி / ராதா ருக்மணி
அறிமுகம்
நெற்குணம் கிராமத்தில் சிவன் கோயிலும் கிருஷ்ணர் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. சிவன் கோயில் மூலவர் ஸ்ரீ விஸ்வநாதர். சுயம்பு மூர்த்தி. அம்பாள் ஸ்ரீ விசாலாக்ஷி. மூன்று கோஷ்டங்கள். ஸ்வாமி அம்பாள் சன்னதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி உள்ளன. மற்ற சன்னதிகள் கணபதி, வள்ளி தேவசேனா சமேத முருகன், பைரவர், சூரியன், சந்திரன், நால்வர் மற்றும் நவக்கிரகம். தினசரி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயில் சமீப காலம்வரை சிதிலமான இருந்தது. காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் முயற்சியினால் இக்கோயில் சீர் செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. கோயில் எதிர்புறம் குளம் காணப்படுகிறது. சிவன் ஆலயம் அருகிலேயே ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கும் தினசரி வழிபாடுக்கள் நடைபெறுகின்றன. தொடர்புக்கு திரு தயாளன்-7708098048, திரு கங்காதரன்-9843926800, திரு செல்வராஜ்- 9940681231.
நம்பிக்கைகள்
பரிகாரதலம்: திருமண தடைகள் நீங்கும் பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது. திருமணம் நடைபெற வேணடுவோர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி விரைவிலேயே திருமணம் நடைபெறும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெற்குணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை