நெடுமரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி
நெடுமரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், நெடுமரம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ விக்ஞாநேஸ்வரர் / ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி : ஸ்ரீ திரிபுரசுந்தரி
அறிமுகம்
நெடுமரம் கிராமம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கூவத்தூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் கல்ப்பாக்கத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கிராமம். நெடுமரம் எனும் இக்கிராமத்தில் உள்ள சிவாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவில் கால மாற்றத்தினால் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. முற்காலத்தில் பெரும் சிறப்புடன் விளங்கிய இக்கோவில் தற்போது ஒருவேளை பூஜைக்கூட மிக சிரமத்துடன் நடைபெறுகிறது. சுவாமி திருநாமம் ஸ்ரீ விக்ஞாநேஸ்வரர். அம்மை ஸ்ரீ திரிபுரசுந்தரி. கோஷ்ட மூர்த்திகளுடன் ஸ்ரீ ஜேஷ்டா தேவி திருஉருவம் காணப்படுகிறது. கோவிலுக்கு தாமரை திருக்குளம் உள்ளது. இந்து அறநிலையதுறையின் கட்டுபாட்டில் உள்ளது இந்தக்கோவில். அர்ச்சகர் திரு ஞானசேகர குருக்கள்-9943734127 தொடர்புக்கு திரு நாராயணன் -9751163871, திரு துக்காராம்-9787446990.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து அறநிலையதுறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெடுமரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை