Sunday Apr 06, 2025

நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில், சேலம்

முகவரி :

நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில்,

நாழிக்கல்ப்பட்டி,

சேலம் மாவட்டம் – 636201.

இறைவி:

துர்க்கை

அறிமுகம்:

நாழிக்கல்ப்பட்டி துர்க்கை அம்மன் கோவில் தமிழ்நாடு, சேலம் மாவட்டத்தில் நாழிக்கல்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு துர்க்கை அம்மன் கோவில் ஆகும். இந்த அம்மன் கோயில் இன்று இந்து சமய அற நிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு கோயில் ஆகும்.

புராண முக்கியத்துவம் :

முன்னொரு காலத்தில் ஒரு வணிகர் தன்னுடைய ஆட்களுடன் சேர நாடான கேரளாவிற்கு சென்று மிளகுகளை வாங்கி வந்து இந்த ஊரில் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். அவ்வாறு மிளகுகளை வாங்கிக் கொண்டு கேரளாவில் இருந்து திரும்ப வரும்போது அவருடைய குதிரை வண்டியில் ஒரு கல் இருந்தது, அது கனமாக இருக்கவே அந்த கல்லை தூக்கி எறிந்து விட்டு வந்தனர், ஆனால் அந்த கல்லை எத்தனை முறை தூக்கி எறிந்தாலும் அந்த கல் தொடர்ந்து அந்த வண்டியிலே இருந்து வந்தது. இது அங்கு இருந்தவர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

இதனால் எதோ ஒரு அற்புதம் நிகழ்வதாக அங்கு சென்றவர்கள் உணர்ந்தார்கள். பிறகு அனைவரும் அந்த கல்லையும் எடுத்து கொண்டே வந்தனர். அந்த இரவு வரும் வழியில் அந்த வணிகரின் கனவில் துர்க்கை அம்மன் தோன்றி அந்த கல் தான் தான் என்றும் தங்களின் பாதுகாபிற்காகவே வருவதாகவும் இதை தான் சொல்லும் இடத்தில வைத்து வழிப்பட்டால் வணங்கும் அனைவருக்கும் துணையாக இருக்கும் அம்மனாக விளங்குவேன் என்றும் கூறி மறைந்தார்.

கனவில் அம்மன் சொன்ன இடத்தில அந்த கல்லை வைத்து இன்றளவும் வழிபடுகின்றனர். அதற்கு சான்றாக இன்றளவும் அந்த வணிக வியாபாரியான செட்டியார் குடும்பத்தில் ஒருவரே அந்த கோவில் தர்மகர்த்தா பதவியில் உள்ளனர்.

 

நம்பிக்கைகள்:

அந்த அம்மனை வணங்கி எந்த ஒரு காரியத்தையும் தொடங்கினால் வெற்றி கிட்டும் என அந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இக்கோவிலுக்கு திருவிழா எடுக்கப்படுகிறது. இங்கு வாராவாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை நடைபெறும் வழிபாடு திருவிழா போன்று காட்சி அளிப்பது தனி சிறப்பு.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாழிக்கல்ப்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top