சங்கடஹரசதுர்த்திவிநாயகரை #இப்படிவழிபடுங்கதுன்பம்எல்லாம்_தீரும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆவணி மாதத்தில் வரும் இரண்டு சதுர்த்திகளும் எப்படி முக்கியமானவையோ அதே போல் புரட்டாசி மாதத்திலும் வரும் சதுர்த்தியும் மிக முக்கியமானதாகும். அதுவும் விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி, பல விதமான நன்மைகளை நமக்கு வழங்கக் கூடிய சிறப்பான விரத நாளாகும்.
🌷
புரட்டாசி மாதத்தில் இந்த ஆண்டு வரக் கூடிய சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையில், மகாளய பட்ச காலத்தில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
🌷
சங்கடஹர_சதுர்த்தி :
🌷
விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதியானது தேய்பிறையில் வரும் போது அதை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். வளர்பிறை சதுர்த்தியை விட, தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது வழக்கம். சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து, விநாயகரை மனதார வழிபட்டால் நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங