நாங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நாங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில்,
நாங்குடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
நாங்குடி என்னும் ஊர் கீழ்வேளூர் தாலூகாவில் அமைந்துள்ளது. கீழ்வேளூருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் -திருவாரூர் இடையில் கீழ்வேளூர் உள்ளது. கீழ்வேளூரிலிருந்து நாங்குடிக்கு செல்லலாம். சின்ன ஊர், இயற்கை எழில் வாய்ந்த சிற்றூர். சுற்றிலும் நெல் விவசாயம். பெரிய குளத்தின் நான்கு கரைகளிலும் வீடுகள், கிழக்கு கரையில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில். அவ்வளவு தான் ஊர். இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி கிழக்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார் அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் கருவறை வாயில் அருகில் விநாயகரும் முருகனும் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் இறைவன் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் ஏதும் இல்லை. சண்டேசர் மட்டும் உள்ளார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி