Thursday Dec 26, 2024

நரசிங்கமங்கலம் சிவன்கோயில்

முகவரி

நரசிங்கமங்கலம் சிவன்கோயில், நரசிங்கமங்கலம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 611 102.

இறைவன்

இறைவன் நாகநாதீஸ்வரர்

அறிமுகம்

கருவேப்பிலங்குறிச்சி யில் இருந்து திட்டக்குடி சாலையில் நத்தபாடி எனும் ஊரில் இருந்து வலது புறம் திரும்பி தாழநல்லூர் ரயில் நிலையத்தினை தாண்டினால் நரசிங்கமங்கலத்தினை அடையலாம். சில தெருக்களை மட்டுமே கொண்ட சிறிய ஊர். இங்கே கிழக்கு நோக்கிய சிதிலமடைந்த சிறிய சிவாலயம் காலத்தினால் முன்னூறு ஆண்டுகள் முற்ப்பட்டது. இறைவன் நாகநாதீஸ்வரர் இறைவி பெயர் தெரியவில்லை ஆனால் அந்த இறைவிக்கு சமமான அந்தஸ்துடைய ஒரு மூதாட்டியின் பெயர் எனக்கு தெரியும், அவர் பெயர் பழனியம்மாள். இதோ இந்த சிதிலமடைந்த கோயிலை கடந்த 40வருடங்களாக எந்த பிற வருமானம் இன்றி கூட்டிபெருக்கி இறைவனையும் அவனின் மைந்தர்கள் இருவரையும் காத்து நிற்கும் இவர் உமையம்மைக்கு நிகரானவள் தானே? இவரது கணவர் இருந்தவரை அவரும் இவரும் இக்கோயிலை ஒருகால பூஜை காசை ( !!) வைத்து பூசை செய்து வந்தனர். அவர் இறந்து போய்விட தனக்கு சொந்தமான இரு காணி நஞ்சை நிலத்தினை குத்தகைக்கு விட்டு அதில் நெல்வருவாயாக கிடைக்கும் சில மூட்டை நெல்லை வைத்து தானும், உண்டு இறைவனுக்கும் செலவிட்டு வரும் இவரின் ஒரே ஆசை இக்கோயிலை குடமுழுக்கு நடத்தி பார்த்திடவேண்டும் என்பதே. இதற்காக இ.ச.அ.துறையினை பலமுறை அணுகி உள்ளார். பலன் இதுவரை பூஜ்யம் என்றாலும் உனை நம்பிகெட்டவர் எவரைய்யா எனும் வரிகள் என்றேனும், எவராலேயினும் மெய்ப்பிக்கப்படும். அதுவரை அவரிருப்பாரா? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாழநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திட்டக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top