நந்தி மலை நந்தீஸ்வரர் திருக்கோயில், கர்நாடகா
முகவரி
நந்தி மலை நந்தீஸ்வரர் திருக்கோயில், நந்தி மலை, மைசூர், கர்நாடகா மாநிலம் – 562103.
இறைவன்
இறைவன்: நந்தீஸ்வரர்
அறிமுகம்
நந்தி மலை நந்தீஸ்வரர் கோயில் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். மைசூரிலுள்ள நந்தி மலை என்னுமிடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. நந்தி மலையில் உள்ள சிவன் கோயில் நந்திகேச்சுரம் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் நந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். வீர சைவ மரபினர் நந்தி தேவருக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எனவே நந்தி மலையில் உள்ள சிவாலயமே நந்திகேச்சுரம் என்றாகலாம். இம்மாநிலத்தில் வீர சைவ வழிபாட்டு முறை மிகவும் பிரசித்தமானது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நந்திமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மைசூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மைசூர்