Wednesday Dec 18, 2024

தொண்டமாநத்தம் சிவன் கோயில்

முகவரி

தொண்டமாநத்தம் சிவன் கோயில், குறிஞ்சிப்பாடிவட்டம், கடலூர்மாவட்டம் – 607 302.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தொண்டைமான்எனப்படுவோர்காஞ்சிபுரத்தைத்தலைநகராகக்கொண்டுதொண்டைமண்டலத்தைஆண்டுவந்தவர்கள். இவர்களின் கட்டுப்பாட்டில், தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும், தளபதிகளும் தொண்டைமான் என்றே அறியப்பட்டனர். இவர்களது ஆளுகையின் கீழ் இருந்த பகுதியே இந்த தொண்டைமாநத்தம் என்றே அறியமுடிகிறது. வடலூர் – கடலூர்சாலையில் உள்ள குள்ளஞ்சாவடியில் இருந்து ஐந்து கிமிதூரத்தில் உள்ளது சுப்ரமணியபுரம். இங்கு இடதுபுறம் உள்ள Indian Oil Bunk எதிரில் செல்லும் சிறிய சாலையில் சென்று தொண்டமாநத்தம் பள்ளியினை தாண்டி இடதுபுறம் தெற்கு நோக்கி செல்லும் சாலையில் சென்றால் பெரியகுளத்தின் கரையில் ஆலயம், அரசு, தென்னை மரங்களடர்ந்த திடல் ஒன்றில் எம்பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றார். அவரின் முன்னம் நந்தியெம்பெருமான் சிறிய அளவில் அழகாக அமர்ந்துள்ளார். நந்தியை ஒட்டி சப்தகன்னியர் குத்துக்கல் வடிவத்தில் வரிசையாய் கிழக்கு நோக்கியுள்ளனர். அடடா என்ன இறைவன் இப்படி மரத்தடியில் உள்ளார் என என்ன வேண்டாம். சாஸ்திரம், சம்ப்ரதாயம், ஆகமம், பாலினபேதம், சாதி, மதம் என இறைவன் அனைத்து எல்லைகளையும் கடந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், விரும்பியவர்க்கு விரும்பிய இடத்தில் வீற்றிருந்தே வந்தோரை காத்தருள்வான். தேவும் தலமும் தமிழ்நாடு, என்றும் தெய்வமணங்கமழும் திருநாடு என்றும் புகழப்படும் இம்மண்ணில் பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அதேசமயம் ஆண்டவனை மரங்களிடியிலும் சோலைகளிலும் நாட்டார் வழிபட்டு வருகின்றார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப்பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார். காஞ்சிமாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம்மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்றது. வாசகம் பாடிய மணிவாசகர் குருந்த மரத்தடியில் ஈசன் திருவருளைப் பெற்றார். முருகவேள் கடம்பமரத்தில் விரும்பி உறைதலால் கடம்பன் என்று பெயர் பெற்றார். பிள்ளையார் அரசமரத்தடியில் அமர்ந்திருக்கின்றார். மருந்துவேண்டாம், மந்திரங்களும் வேண்டாம், அதனால்தான் அவன் பெயர் கூட வைத்து கொள்ளவில்லை தென்றலில் அலையடிக்கும் பெரும் குளக்கரையில் மொட்ட விழும் தாமரையின் ஒலிகேட்டு, இவ்வனத்து இறைவனும் இயல்பாய் அமர்ந்திருக்கின்றார். அவனெதிரில் சிறிதுநேரம் கண்மூடி ஓர் நாழிகை அமர்ந்திருந்தாலே போதும் மூலாதாரத்தில் இருந்து துரியத்திற்கு உயிர்சக்தியை ஏற்றியருள்வார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குறிஞ்சிப்பாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

குறிஞ்சிப்பாடி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top