Saturday Jan 18, 2025

தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி

தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் – – 606 902. போன்: +91- 4173-247 482, 247 796.

இறைவன்

இறைவன்: கனககிரீசுவரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

திருவண்ணாமலைமாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் விஜயநகர பேரரசரால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு இது இரண்டாவது பெரிய கோவில். மலைக் கோவிலில் நிறுவப்பட்ட ஸ்ரீ கனககிரீஸ்வரரின் துணைவியார் ஸ்ரீ பெரியநாயகி அம்மன், கீழே காணப்படுகிறார். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

மலை உச்சியில் சுவாமி : அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருநாமம் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்று அழைக்கப்படுகின்றது. சுடுதண்ணீர்ணீ அபிஷேகம் : வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டியபோது குபீர்பீ என ரத்தம் கொப்பளித்தாம். அதை மேலும் தோண்டிய போது அழகிய சிவலிங்கத் திருமேனி தெரிய வந்தது.அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிஷேகம் செய்தனர்.அது இன்றும் மலை மேல் உள்ள இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.சுயம்புத் திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசிவிசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காலங்காலமாக பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த வேடன் கதை, செவிவழிச் செய்தி ஆகும். அம்பிகை பெரியநாயகி ஆலயம் : கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல, இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றாள். இவ்வன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்றும் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறது.தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. மலையடிவாரத்திலுள்ள பெரியநாயகி கோயில், சக்திபீடபீ ங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால், திருமணத்தடை உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தவத்தை மெச்சி பங்குனி உத்திரத்தின்போது சுவாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு. இரட்டை மூலஸ்தானம்: ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன், இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால், சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்ட காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொள்வார்கள். காரியம் முடிந்ததும், கடவுளை மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படியே மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், மறைந்த சுயம்புலிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்ச்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வரர் என பெயரிட்டு, அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது. உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பது போல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில், அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. எல்லாநாளும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிகள் அமைக்கப்பட்டது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரப் பெருவிழா – பங்குனி மாதம் (மார்ச்) கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாள் உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். இவ்விழாவில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் சிறப்புடையதாகும். சித்திரை (ஏப்ரல்) – நடராஜர் அபிஷேகம் புரட்டாசி – நவராத்திரி ஐப்பசி – மலையின் மீது சுவாமிக்கு அன்னாபிசேகம் கார்த்திகை – கார்த்திகை தீபத்திருவிழா மாசி- மகாசிவராத்திரி இவை தவிர பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்புற நடைபெறுகிறது. பிரதோஷம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேஷ நாட்களான தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி,பொங்கல் தினங்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

காலம்

14 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவிகாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

போளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top