Wednesday Jul 03, 2024

தேரழுந்தூர் ஆமருவியப்பன் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர்-609 808, மயிலாடுதுறை தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.

இறைவன்

இறைவன்: தேவாதிராஜன், ஆமருவியப்பன் இறைவி: செங்கமலவல்லி

அறிமுகம்

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். மூலவர் தேவராஜன் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலஸ்தானத்தில் பார்வதி பசு ரூபத்தில் உள்ளார். மார்க்கண்டேய முனிவர் பிறவா வரம் பெற, ஆமருவியப்பனை வணங்கினார். இதனால் இவரை ஆமருவியப்பன் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். பக்த பிரகலாதனும் மூலஸ்தானத்தில் உள்ளார். மூலஸ்தானத்தில் உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் மேல் உள்ள விமானம் கருட விமானம். தர்மதேவதை, உபரிசரவசு, காவிரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

புராண முக்கியத்துவம்

இக்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது. பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு. உற்சவங்கள் மன்னன் கோஹத்தி சாபம் நீங்கப்பெற்ற நிகழ்வை ஒட்டி, இப்போதும் வருடத்தில் 2 நாட்கள் தை அமாவாசை தினத்திலும், புரட்டாசி கடைசி சனிக் கிழமையும் மூலவர் பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணை உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோவிலில் பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் தேர் திருவிழா, பிரம்மோற்சவம், கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், தெப் போற்சவம், தாயாருக்கு தனியாக பிரம்மோற்சவம், பவித்ரோத்சவம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுகின்றன. கருட விமானம் இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும். ராஜ பதவி இக்கோவிலில் திருமண வரம் வேண்டுவோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர் வெண்ணெய் மற்றும் எண்ணை தந்து வழிபட, தோஷங்கள் நீங்கப்பெற்று, வேண்டிய வரம் பெறுவர். இத்தலத்தில் வேண்டு வோர்க்கு ராஜபதவி கிடைப் பதுடன், ராஜபதவியை பெற ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளும் நீங்கும். இக்கோவிலின் தல விருட்சம் பலாமரம் ஆகும். தல தீர்த்தம் இக்கோவிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமா வாசை. அமாவாசை யன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது. கம்பர் சிலை கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும். அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தி யருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். அரசனின் ஆணவத்தை அடக்கிய கிருஷ்ணர் தேவாதி ராஜப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கின்றார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். காவிரித் தாய் பெருமாளை மண்டியிட்டு சேவித்துக் கொண்டிருக்கிறாள். கம்பரின் அவதார தலம் இது. கம்பர், நரசிம்ம அவதாரம் பற்றி இங்குதான் பாடினார். கம்பருக்கும், அவர் மனையாளுக்கும், கோவிலுக்குள் சிலை எழுப்பியிருக்கிறார்கள். திருமங்கையாழ்வாராலும், மணவாள மாமுனிகளாலும் மங்களா சாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம் இது. இங்கு யோக நரசிம்மர், வாசுவேதர், விஷ்வக்சேனர், தேசிகர், ராமபிரான், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.இங்குத் தருமதேவதை, உபரிசரவசு, கருடன், காவிரி, அகத்தியர் ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள். இங்குப் பெருமாள் ருக்குமணி, சத்திய பாமாவுடனும் பசுங்கன்றுடனும் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீ கிருஷ்ணனாகத் காட்சி தருகிறார். கண்ணபிரானால் மேய்க்கப்பட்டிருந்த பசுக்களை ஒருசமயம் நான்முகன் கவர்ந்து சென்றான். அதை அறிந்த கண்ணபிரான் மாயையால் வேறு பசுக்களைப் படைத்தார். பிரமன் தன் தவற்றை உணர்ந்து வேண்டப் பெருமாள் ஆமருவியப்பன் என்னும் திருப்பெயரோடு இத்தலத்தில் எழுந்தருளினார். ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார்.

நம்பிக்கைகள்

இந்த தலத்தில் விதிப்படி பூஜைகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் தூள்-தூளாகிவிடும். மேல் அதிகாரிகள் அராஜகத்துடன் நடந்து கொண்டால், இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால் பலன் உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திருப்பவும், தொலைந்து போன பெ£ருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தல வழிபாடு உதவுகிறது.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார். தலப்பெயர் விளக்கம்: உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “தேரெழுந்தூர்’ ஆனது. கருட விமானம்: ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “”108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு” என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்க விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

திருவிழாக்கள்

வைகாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி ஆகியன முக்கிய திருவிழாக்கள்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேரழுந்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top