திருவிடைமருதூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
திருவிடைமருதூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
திருவிடைமருதூர்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612104.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்கிழக்கு மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதரை சென்று பார்ப்போம். கிழக்கு வீதியின் தென் மூலையில் ஒரு சிறிய தெரு கிழக்கு நோக்கி செல்கிறது. அதில் மேற்கு நோக்கிய சிவாலயமாக காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கோயில் ஆகும். முன்பு ஆலய ஓதுவார்கள் நிறைந்திருந்த இந்த தெரு மனைகள் முற்றிலும் முஸ்லிம்களால் வாங்கப்பட்டு பள்ளிவாசல் தெருவாகிவிட்டது. இதனால் கோயில் தன் பூஜைகள் இழந்து ஒரு வேளை பூஜைக்கு வந்துவிட்டது.
சில வருடங்களின் முன்னம் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு அப்பணிக்களும் தொய்வடைந்துள்ளன. இருபது சென்ட் நிலப்பரப்பில் கோயில் உள்ளது, மேற்கு நோக்கி இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் கருவறைக்கு முன்னர் நீண்ட மண்டபம் உள்ளது. வெளியில் நந்தி உள்ளார், தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் உள்ளது. இறைவன் கருவறை வாயிலில் சில சிலைகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் துர்க்கையும், தென்முகனும் உள்ளனர், சண்டேசர் நன்கு பெரிய திருமேனியாக உளது ஆங்காங்கே கருங்கற்கள் பெயர்த்து குவிக்கப்பட்டுள்ளன. தென்புறம் பெரிய விளவமரம் படர்ந்துள்ளது. கோயில் நுழைவாயில் சுவரில் ஓர் கல்வெட்டு ஒன்று தலைகீழாக உள்ளது. கொடைகொடுத்த விபரம் அதில் காணப்படுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி