Thursday Dec 26, 2024

திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி – 613 103. வழி – திருக்கண்டியூர். திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 – 4365 – 284 573, 322 290

இறைவன்

இறைவன்: ஆஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் இறைவி: ஞானாம்பிகை

அறிமுகம்

திருவாலம்பொழில் ஆத்மநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 10வது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

இத்தலக் கல்வெட்டு இறைவனை “”தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்’ என்று குறிக்கிறது. அப்பரும் தம் திருத்தாண்டகத்தில் “”தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே’ என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் – பரம்பைக்குடி என்றும்; கோயில் – திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அஷ்டவசுக்கள் பூஜித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 73 வது தேவாரத்தலம் ஆகும். சப்த ஸ்தானத்தில் ஒன்று. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தெட்சிணாமூர்த்தியாக உள்ளார். காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டது. கோயிலில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது. இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

ஆவணி மூலம், சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கண்டியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top