திருவல்லவாழ் ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான் திருக்கோயில், கேரளா
முகவரி
அருள்மிகு கோலபிரான் திருக்கோயில், திருவல்லா , பத்தனம்திட்டாமாவட்டம், கேரளா – 686 101.
இறைவன்
இறைவன்: திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்) இறைவி: செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்
அறிமுகம்
திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது. கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார் இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
புராண முக்கியத்துவம்
விரதங்களில் ஏகாதசி விரதம் மிக சிறப்புடையது. விரத அனுஷ்டானமானது. ஏகாதசியன்று பூராவும் உபவாசமிருந்து ஹரிஸ் மரனையாகவே இருக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்திருக்க வேண்டும். மறுநாள்து வாதசியன்று காலை நீராடி விஷ்ணு பூஜை முடித்து முதலில் ஒரு அதிதிக்காவது அன்னம் பரிபாலித்து பிறகு தான் பிரசாதம் புசிக்க வேண்டும். இங்கணம் இவ்வூரில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த ‘சங்கர மங்கலத் தம்மை’ எனும் உத்தமி ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைப்பிடித்து வந்தார். ஆனால் இந்த அம்மையாருக்கு ‘தோலாசுரன்’ என்பவன் மிகுந்த இடையூறுகளும் தொந்தரவுகளும் கொடுத்து வந்திருக்கிறான். தனது பக்தைக்கு உண்டாக்கப்படும் இன்னல்களை நீக்கவும் அந்த அம்மையாருக்கு முக்தி பதம் அளிக்கவும் திருஉள்ளம் கொண்ட ஸ்ரீ மகாவிஷ்ணு ஒருது வாதசியன்று பிரம்மச்சாரி வேடத்தில் அம்மையார் வீட்டுக்கு வந்து அந்த நேரம் அங்கு வந்து தன்னை எதிர்த்த தோலாசுரனை சங்கரித்து, அம்மகாபதி விரதைக்கு காட்சியளித்தருளினாராம். அதுசமயம் அவர் மார்பினை உத்திரீயத்தால் மறைத்திருந்தாராம். மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் திருவை (லட்சுமியை) காணும் வேட்கையால் அம்மையார் அவர் உத்திரீயத்தை அகற்றச் சொன்னாராம். அவரும் மேலாடை எடுத்து திருவாழ்கின்ற மார்பினை காட்டியருளினாராம். அதனால் தான் அவருக்கு திருவாழ்மார்பன் என்று பெயர். இன்றும் அவர் மேலாடை இல்லாமல் இருக்கும் திருமார்பை தரிசிக்கலாம் மற்றும் அவர் தோலாசுரனை வெட்டி வீழ்த்திய சக்கராயுதம் மூலவருக்கு பின்புறம் காட்சி அளிக்கிறது. மற்றொரு சமயம் இவ்வூரில் கண்டாகர்ணன் என்றொரு சிவபக்தன் இருந்தான். அவன் சிவனை தவிர மற்ற தெய்வங்களின் பெயர்கள் கூட பிறர் பேச தன் காதில் விழக்கூடாது என்பதற்காக தனது இரு காதுகளிலும் இரண்டு மணிகளை கட்டிக்கொண்டானாம். கண்டம் = மணிகள். கர்ணம் = காதுகள் =கண்டாகர்ணன். மணிகள் அணிந்த காதுகள் உடையவன். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பேதமில்லை. இருப்பது ஒரே பரம்பொருள் தான். அதுதான் வெவ்வேறு ரூபங்களில் காட்சியளிக்கிறது. சிவவிஷ்ணு பேதம் கொண்டாடுவது தகாது எனும் உண்மைகளை தன் பக்தனுக்கு தெளிவுபடுத்த எண்ணிய சிவபெருமான் அவனுக்கு பிரத்தியட்சமாகி, ‘ஓம்நமோநாராயணா’ எனும் அஷ்டாக்ஷரியை உபதேசிக்கவும், அது முதல் அவன் அஷ்டாக்ஷரியை ஜபித்து சாயுஜ்ஜிய நிலை பெற்றதாக ஐதீகம். இது ஒரு பிதுர்காரியம் செய்ய உகந்த இடம். இத்திருத்தலத்தில் சிவபெருமானுக்குரிய விபூதி, பிரசாதமாக வழங்கப்படுவதும், திருவாதிரை நாள் உற்சவம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கவை. இத்திருத்தலத்தில் ஒரே கல்லாலான 50 அடி உயரத்வஜஸ்தம்பம் பொன்தகடு வேயப்பட்டது விசேஷமானது.
திருவிழாக்கள்
கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா உத்ரா ஸ்ரீ பாலி
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவல்லா
அருகிலுள்ள இரயில் நிலையம்
பதனம்திட்டா
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி