Friday Jun 28, 2024

திருப்பாற்கடல்

முகவரி

திருப்பாற்கடல்

இறைவன்

இறைவன்: வெங்கடேஸ்வரர்

அறிமுகம்

இந்ததிவ்யதேசம் நிலஉலகில் இல்லை . அவைகள் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணு வசிக்கும் இடங்கள். 108-வது திவ்யதேசமாகிய திருப்பரமபதத்தில் பெருமாள் அமர்ந்திருந்து ஆட்சிபுரியும் இடம். 107-வதாகிய மேற்படி திருப்பாற்கடலில் ஐயன் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் இடம். இந்த இரு இடங்களுக்கு மானுடம் இந்த பூதவுடலோடு செல்வது ஆகாது. ஆனால் தீவிரபக்தி பூண்டு மனதளவில் பரமனோடு ஒன்றிவிட்ட ஞானிகள் முதலாய அடியார்கள், பரமாத்மாவோடு ஜீவாத்மா ஒன்றி நிற்கும் நிலை (சாயுஜ்யம்) பெற்றவர்கள் பூதவுடலை நீத்த பிறகு கடவுள் இருக்கும் உலகை (சாலோகம்) அடைந்து, கடவுளைப்போலவே உருப்பெற்று (சாரூபம்), அவருடனே வாழ்ந்திருப்பார்கள் என்று வேதவேதாந்தங்கள், புராணேதிகாசங்கள் போன்ற நமது சாத்திரங்கள் முழங்குகின்றன.

புராண முக்கியத்துவம்

அங்கணம் தகுதி பெற்றவர்களே நமது முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள் முதலானோர். அவர்கள் வழி வந்த ஆழ்வார்கள் பக்தி மேலீட்டால் பரமன் திருப்பாற்கடலிலும், திருப்பரமபதத்திலும் (ஸ்ரீவைகுண்டம்) இருக்கும் நிலைகளை தங்களின் மனத்திரையில் கண்டு மங்களாசாஸனம் செய்துள்ளார்கள். மேற்படி 107 திருப்பாற்கடல் மற்றும் 108 திருப்பரமபதத்தில் பரமாத்மா எங்கணம் நிலை கொண்டுள்ளாரோ அதே நிலையில் நமது நாட்டிலும் இரண்டு இடங்களில் காட்சியளிக்கின்றார். பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களை தரிசித்தவர்கள், அவர்கள் பரமபதித்த பின் பகவானே அவர்களை இந்த திவ்யதேசங்களுக்கு அழைத்துக்கொள்கிறார் என்று பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறபடியால், 106 திவ்யதேசங்களை கண்ட நாம் மேலோகத்தில் பரமனின் வாசஸ்தலங்களாகிய திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம் போன்றே நமக்கருகாமையிலும் இருக்கின்ற இரண்டு தலங்களையும் தரிசித்து, சேவித்து நமக்கும் சாலோகபிராப்தி உண்டென்று நம்புவோமாக.

நம்பிக்கைகள்

காட்சிகண்டவர்கள் : பிரம்மா, ருத்ராதிகள் முதலிய தேவர்கள். மங்களாசாஸனம்: பெரியாழ்வார் 5, ஆண்டாள் 3, குலசேகராழ்வார் 2, திருமழிசையாழ்வார் 13, தொண்டரடிப்பொடியாழ்வார் 1, திருமங்கையாழ்வார் 11, பொய்கையாழ்வார் 1, பூதத்தாழ்வார் 2, பேயாழ்வார் 4, நம்மாழ்வார் 9 ஆக 51 பாசுரங்களில்போற்றியுள்ளார்.

0

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top