திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி
திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் PIN – 628215
இறைவன்
இறைவன்: செந்திலாண்டவர்
அறிமுகம்
கந்தமாதனம் (திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஒரு பகுதி). மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூர் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் வசதியும் உள்ளது. கந்தமாதனம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலின் வடபால் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டினாற் போல, மணலால் சிறு மலைப்பகுதி போலஅமைக்கப்பட்டுள்ளது. இவ்விடமே வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமான் விடுத்த தூதுராகிய வீரவாகு தேவர் கந்தமாதனக் குன்றினின்றும் எழுந்து வீர மகேந்திரத்தை நோக்கிச் சென்றார் என்று கந்த புராணம் மகேந்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்செந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்செந்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி