திருச்சாளக்ராமம் (முக்திநாத்)
முகவரி
திருச்சாளக்ராமம் (முக்திநாத்), மஸ்டாங் மாவட்டம், தவளகிரி மண்டலம்த் – 33100, நேபாளம்
இறைவன்
இறைவன்: ஸ்ரீ மூர்த்தி இறைவி: ஸ்ரீதேவி நாச்சியார்
அறிமுகம்
சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம். சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.
புராண முக்கியத்துவம்
முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள். ஜலந்திரன் சாகா வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான். ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப்படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான் அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார். இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது. அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது. உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார். பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள். அதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.முக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி! உன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!” என்று அருள்பாலித்தார்.
நம்பிக்கைகள்
திருமாலே ஜானகிராமன் உறுதி குடி கொண்டிருக்கிறார் என்பதால் கஷ்டமோ நஷ்டமோ நாம் அனைவரும் சாலிகிராம புண்ணிய சேர்த்து இடத்திற்குச் செல்ல முடிகிறதோ இல்லையோ தங்கள் வீட்டில் சாளக்கிராமத்தை வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் போதும். நமது ஜென்மத்திற்கு முக்தி கிடைத்ததாகவே எண்ணிக் கொள்ளலாம். பாவங்கள் கரையும் பகவானது திருவடித் தாமரையின் அனுக்கிரகம் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்
கோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.
திருவிழாக்கள்
மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களிலும் கிருஷ்ணாவதார நாளான ஆவணி மாத ஜன்மாஷ்டமி முதல் வாரத்திற்கு நடைபெறும் பஜனைகள், நாடகங்கள் மிகச்சிறப்பு.
காலம்
2000 – 3000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
நேபாளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
போகாரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
போகாரா
அருகிலுள்ள விமான நிலையம்
போகாரா