Sunday Nov 24, 2024

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் – 612 205. தஞ்சாவூர் மாவட்டம். போன் +91- 4364-232 055, 232 005.

இறைவன்

இறைவன்: கோழம்பநாதர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

திருக்கோழம்பம் – திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது. இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 98 வது தேவாரத்தலம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து மீண்டும் தன் கணவனை அடைந்தாள். பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் சிவனின் அடிமுடி காண்பதில் பிரச்னை ஏற்பட்டது. பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.

நம்பிக்கைகள்

சாபங்கள் தீர பிரார்த்தனை செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்தை சுற்றி திருநல்லம்(கோனேரிராஜபுரம்),வைகல் மாடக்கோயில், திருநீலக்குடி, தென்குரங்காடுதுறை, திருவீழிமிழலை, திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன. திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன்.

திருவிழாக்கள்

நவராத்திரி சிவராத்திரி கந்தசஷ்டி சித்திரை திருவிழா

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top