திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில், கடலூர்
முகவரி :
திருக்கண்டேஸ்வரம் இரட்டை லிங்கேஸ்வரர்கள் திருக்கோயில்,
திருக்கண்டேஸ்வரம், பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607105.
இறைவன்:
லிங்கேஸ்வரர்
அறிமுகம்:
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நடனபாதேஸ்வரர் திருக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. மேற்படி கோவிலை பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், புறையன், சாலவ நரசிம்மன், ஆந்திர தளபதி நரசையன் ஆகியோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய இக்கோயிலின் வெளியில் வடமேற்கு பகுதியில் இரட்டை லிங்கேஸ்வரர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கூரை ஏதுமின்றி ஓர் பெரிய மரத்தடியில் சிமென்ட் தளத்தில் அமர்ந்து பக்தர்களின் வருகையை எதிர்பார்க்கின்றனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கண்டேஸ்வரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி