தியாகராஜபுரம் அமிர்தலிங்கேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
தியாகராஜபுரம் அமிர்தலிங்கேஸ்வரர் சிவன்கோயில்,
தியாகராஜபுரம், பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613104.
இறைவன்:
அமிர்தலிங்கேஸ்வரர்
அறிமுகம்:
கச்சமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள் மகாதேவபுரம் திருப்பையூர் தியாகராஜபுரம். கல்லணைக்கு கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றின் உள்ளது கச்சமங்கலம், திருக்காட்டுப்பள்ளி – பூதலூர் சாலையில் நான்கு கிமீ தூரம் வந்து வலதுபுறம் திரும்பி வெண்ணாறு கிளை கால்வாய் கரையில் 5 கிமீ தூரம் வந்தால் கச்சமங்கலம். கால்வாயின் ஒருபுறம் கச்சமங்கலம் மறுபுறம் தியாகராஜபுரம்.
சாலையை ஒட்டி ஒரு மரத்தடியில் விநாயகர் ஒரு அழகிய மாடத்தில் உள்ளார்,, அருகில் ஒரு கல்நார் கொட்டகையில் இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக அமிர்தலிங்கேஸ்வரர் எனும் பெயர் தாங்கி உள்ளார் அருகில் ஒரு தூணில் புடைப்பு சிற்பமாக இருந்த விநாயகர் உள்ளார், அவரது தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது கொட்டகையின் வெளியில் ஒரு சண்டேசர் சிற்பமும் நேர் எதிரில் ஒரு பெரிய நந்தியும் உள்ளது. இப்பகுதியல் சமணர் தடயங்கள் அதிகம் காணமுடிகிறது. அருகில் ஒரு மரத்தடியில் சமணர் ஒருவருடைய சிற்பம் உள்ளது யாரென அறிய முடியவில்லை.









காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தியாகராஜபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி