Sunday Jan 19, 2025

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்- திருச்சி

முகவரி

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் தலைமலை, நீலியாம்பட்டி, திருச்சி மாவட்டம் – 621208 தொலைபேசி: +91 98436 58044 / 97905 74284 / 99436 59130

இறைவன்

இறைவன்: சஞ்சீவிராய பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி – நாமக்கல் மாவட்டங்களின் இடையே உள்ள தலைமலையில் உள்ள பெருமாள் கோயிலாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது தலைமலை காப்புக்காடு. இதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி திருச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் நிறைந்ததாக இந்த மலை காணப்படுகிறது. இந்தக் காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயர மலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, வடவத்தூர், செவிந்திப்பட்டி, திருச்சி மாவட்டம் நீலியாம்பட்டி, சஞ்சீவிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உள்ள ஐந்து பாதைகள் வழியாக கரடுமுரடான, செங்குத்தான மற்றும் சில இடங்களில் மிகவும் ஆபத்தான பாதையைக் கடந்து ஏறக்குறைய ஏழு கிமீ தொலைவுக்கு நடந்து மலை உச்சிக்குச் செல்ல முடியும். கீழிருந்து வரும் அனைத்துப் பாதைகளும் தலைமலையில் இருந்து சுமார் ஒரு கிமீ கீழே உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் ஒன்று சேர்கின்றன.

புராண முக்கியத்துவம்

நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில், உள்ள இறைவன் தானாய் வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். இந்த இறைவனான நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியவராக கருதப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்கள் மூலவர்களாகவும், சீனிவாச பெருமாள், ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்கள் உற்சவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார் மூலவராகவும், மகாலட்சுமி உற்சவராகவும் உள்ளனர். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். தலைமலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பாதம் மட்டுமே வைக்கும் அளவுக்கு சுமார் 4 அங்குலம் அகலமே உள்ள சுவரின் விளிம்பில் உயிரைப் பணயம் வைத்து நடந்து வலம்வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்தச் செயலை தலைமலை கிரிவலம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கிரிவலம் சென்றசிலர் தவறி விழுந்து இறந்துள்ளனர். இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சஞ்சீவி நல்லேந்திரபெருமாள், வெங்கடாஜலபதி, அலமேலு மங்கை தாயார், மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் 4,500 அடி உய ரமுள்ள மலை உச்சியில் கோவிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உள்ள சுவரை பிடித்து கொண்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. விவசாயம் செழிப்பாக விளங்கிட தங்களது வயலில் விளையும் காய்கறிகள், நெல், கடலை உள்ளிட்ட தானியங்களையும் பக்தர்கள் கோவிலுக்கு வழங்கினர். மலைஅடிவாரத்தில் தளுகை பூஜை நடத்தி பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். மலைஉச்சிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபூமி, நீலா தேவி சமேத லட்சுமிநாராயண சுவாமி பெருமாள் கோவிலில் வழிபட்டு சென்றனர்.

நம்பிக்கைகள்

இந்த மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. பக்தர்கள் கரடு, முரடான மலைப்பாதையில் ஏறி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் பெருமாளை வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத்தடை அகலும், குடும்பம் செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

சிறப்பு அம்சங்கள்

இலங்கையில் இராவணனுடன் நடந்த போரின்போது மூர்ச்சையடைந்து விழுந்த இலட்சுமணனை காக்க அனுமன் தூக்கிச் சென்ற மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில், மலையை ஆஞ்சநேயர் வீசியெறிந்ததாகவும், அது 7 துண்டுகளாகச் சிதறி விழுந்ததாகவும் அவற்றில் ஒன்று இந்த தலைமலை எனவும் கூறப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் கோயில் உள்ளதால் தலைமலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நீலியம்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top