தப்பளாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
தப்பளாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில்,
தப்பளாம்புலியூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி:
நித்யகல்யாணி
அறிமுகம்:
திருவாரூருக்கு தென்கிழக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தப்பளாம்புலியூர். நாகை செல்லும் புறவழி சாலையில் இருந்து பிரியும் புதுபத்தூர் சாலையில் மூன்று கிமீ செல்ல வேண்டும். முனிவர் வியாக்ரபாதர் சிவலிங்கம் நிறுவி ஆலயம் அமைத்த 9 வியாக்ரபுரங்களில் இதுவும் ஒன்று. இறைவன் – வியாக்ரபுரீஸ்வரர் என்றும் இறைவி – நித்யகல்யாணி என்றும் அழைக்கப்படுகிறார். சிவன்கோயில், கிழக்கு நோக்கிய பெரிய கோயில், கோயில் எதிரில் பெரியதொரு குளம் உள்ளது, ஆனால் கோயிலுக்கு செல்ல நேர் வழி இல்லாமல் உள்ளது கோயில் பின்புறம் தெரு செல்கிறது இதிலிருந்து கோயில் பக்க வாட்டில் ஒரு சிறிய சந்து போன்ற வழி கோயில் செல்லும் பாதையாக உள்ளது. கி
சிவன் கோவிலின் காலம் தெரியாது ஆனால் தற்போதுள்ள கோயில் கட்டியவர் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரமன் ஆவார். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் இக்கோயிலை கட்டி நிபந்தங்கள் பல அளித்துள்ளமை இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்பட்டது.
புலி பூஜித்ததாலேயே ஈசனின் திருப்பெயர் வியாக்ரபுரீஸ்வரர் இவ்வூருக்கு மண்டூக வியாக்ரபுரம் எனும் பெயரும் உண்டு வியாக்கிரபாதரின் புலித்திருமேனியை நீக்கி மனித உடல் தந்த இடம் பதஞ்சலி வியாக்ரபாதர் மண்டூகர் மூவரும் இறைவனின் திருநடன காட்சியை கண்டு களித்த இடம் இதனால் இங்கு கோஷ்டத்தில் நடராஜ மூர்த்தம் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
அம்பிகை இங்கு குடி கொண்டதற்கு ஒரு வரலாறு உள்ளது, தென்காசி -கடையம் பகுதியில் வாழ்ந்த சித்தர் ஒருவரின் உபாசன மூர்த்தியாக இருந்த அம்பிகை அவருடன் பெண் குழந்தையாக மாறி அவருடன் விளையாடி வந்தாள், சித்தரும் அவளுக்கு கல்யாணி என பெயரிட்டு மகிழ்ந்தார் ஒருமுறை திருமண நிகழ்வுக்கு சென்று வந்த சித்தர் அன்னையை அழைக்க அவள் குழந்தையாக வரவில்லை, வருத்தமுற்ற சித்தர் இறைவனை வேண்ட அவர் “நின் மகளை யாம் மணம் முடித்துவிட்டோம். அவளை தேடவேண்டாம் அவள் நித்ய கல்யாணியாக எம்முடனேயே இருப்பாள்” என்றார். சித்தரும் பல்வேறு தலங்கள் சென்று விட்டு கடைசி காலத்தில் தப்பளாம்புலியூர் வந்து அன்னையை மானசீக பிரதிஷ்டை செய்து முக்தியடைந்தார்.
விக்கிரம சோழன் காலத்தில் அம்பிகை சன்னதி கட்டப்பட்டவுடன் நித்திய கல்யாணிக்கு உருவச்சிலை கிடைத்தது. அழகிய பெண் குழந்தை வேண்டுவோர், இங்கு வழிபட்டு பலன் கிடைக்க பெறலாம். இங்கு தங்கி வழிபட்ட காஞ்சி பெரியவர் போகமோட்சப்ரதாயினியாக இருப்பதாக கூறியதன் மூலம் இதனை தெரிந்து கொள்ள முடிந்ததாம்.
இங்குள்ள ஏகபாதருத்ரர் சிறப்பானவர் வடக்கு நோக்கி தனி சன்னதி கொண்டுள்ளார். அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசியில் இவரை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார், முகப்பில் கூம்பு வடிவ மண்டபம் உள்ளது, அதில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை அற்புதமான சோழர்கால கருங்கல் கட்டுமானம் கொண்டது, கருவறை கோட்டங்களில் நடராஜர், தென்முகன் ரிஷபாந்திகர் பிரம்மன், துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன் இருவருக்கும் சன்னதிகள் உள்ளன. வடமேற்கு மூலையில் ஜேஷ்டாதேவி ஒரு மாடத்தில் உள்ளார். இதனால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இங்கிருந்துள்ளது. வடக்கில் பெரிய வன்னி மரங்கள் இரண்டு உள்ளன. தென்புற மதில் சுவற்றோரம் சப்தகன்னிகள் உள்ளார்கள். சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய ஒரு அமைப்பு திருநள்ளாறு போன்ற சில தலங்களில் மட்டுமே காணப்படுகிறது கிழக்கை நோக்கிய சனீஸ்வர பகவான் ‘அனுகிரக மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். வடகிழக்கில் இரு பைரவர்களும், சூரியன் சிலைகளும் தனி சன்னதியில் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தப்பளாம்புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி