தண்டாங்கோரை கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
தண்டாங்கோரை கைலாசநாதர் திருக்கோயில், தண்டாங்கோரை, பசுபதி கோயில் வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 614206.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: சர்வலோக நாயகி
அறிமுகம்
தஞ்சாவூர் – கும்பகோணம் பாதையில் மானாங்கோரைக்கு அடுத்துத் தண்டாங்கோரை தலம் உள்ளது. இதே சாலையில் கும்பகோணத்தில் இருந்து வரும்போது அய்யம்பேட்டையை அடுத்து ‘தண்டாங்கோரை உள்ளது. தஞ்சாவூரிலிருந்நு 13 கி.மீ. தொலைவு. தண்டங்குறை என்பது பழைய பெயராகும். தற்போது மக்கள் வழக்கில் ‘தண்டாங்கோரை’ என்று வழங்குகிறது. இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயில். மிகவும் நேர்த்தியான நந்தி மண்டபம் உள்ளது.இத்தல இறைவன் கைலாசநாதர் என்றும் இறைவி சர்வலோக நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்திருக்கோயில் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஊரின் நடுவில் அமைந்துள்ளது இக்கோயில். ஸ்ரீஅம்பாள், சுவாமி சந்நிதிகள் உள்ளன. இவை தவிர விநாயகர் சந்நிதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி , வள்ளி – தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி சந்நிதி , ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீ நந்தி மண்டபம், ஸ்ரீ நவகிரக சந்நிதி ஆகியவை இருக்கின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள், மண வாழ்க்கையில் நிறைவு இல்லாதவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இந்தக் கோயிலில் உறையும் அம்பாளையும், சுவாமியையும் மனதார வழிபட்டால் அனைத்து இன்பகளும் பெறலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தண்டாங்கோரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி