சௌகந்தி பெளத்த ஸ்தூபி, உத்திரப்பிரதேசம்
முகவரி
சௌகந்தி பெளத்த ஸ்தூபி, ரிஷப்பத்தான் சலை, சாரநாத், வாரணாசி, உத்திரப்பிரதேசம் மாவட்டம் – 221007.
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
சௌகந்தி ஸ்தூபி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் அமைந்த பௌத்த ஸ்தூபியாகும். இந்த இடம் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னமாக ஜூன் 2019 இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் அறிவிக்கப்பட்டது. செளகந்து ஸ்தூபம் தியானிப்பதற்கும் மன அமைதியை அடைவதற்கும் சரியான இடம். சாரநாத்தில் உள்ள இந்த பிரபலமான பெளத்த ஸ்தூபியின் அருகே, வராண்டாக்கள் மற்றும் முற்றங்கள் உள்ளிட்ட பல நூற்றாண்டுகள் பழமையான மடங்களின் இடிபாடுகளையும் காணலாம். உலகெங்கிலும் உள்ள பெளத்த மதத்தை பின்பற்றுபவர்கள் இந்த இடத்திற்கு வருகை தருவது செளகந்தி ஸ்தூபியின் சிறப்பு. எனவே, இந்த தளம் மகத்தான மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 – 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ ஸ்தூபியாக மாற்றி நிறுவப்பட்டது. சௌகந்தி ஸ்தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
காலம்
4 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாரநாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கண்ட்
அருகிலுள்ள விமான நிலையம்
வாரணாசி