சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
சோழங்கநல்லூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611105.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
அறிமுகம்:
திருவாருரின் வடகிழக்கில் கங்களாஞ்சேரி-நாகூர் சாலையில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது சோழங்கநல்லூர் கிராமம். சோழங்கர் எனும் இனத்தவர் தொன்று தொட்டு வசிக்கும் ஊராதலால் இந்த பெயர் வந்துள்ளது. ஊரின் மையத்தில் உள்ளது சிவன்கோயில், கிழக்கு நோக்கிய சிவன் கோயில், முகப்பு வாயிலில் இரண்டு பெரிய துவாரபாலகர்கள் முகப்பு மண்டபத்தில் உள்ளனர். மண்டபத்தின் வாயிலின் மேல் ரிஷபக்காட்சி சுதை வடிவம் உள்ளது.
இறைவன் காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இறைவன் கோயில் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். இறைவன் முன்னம் உள்ள மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகனும் வடக்கில் துர்க்கையும் உள்ளனர். பிரகார சுற்றில் விநாயகர் தனித்த சன்னதி கொண்டுள்ளார், அவரின் எதிரில் உள்ள விநாயகர் சிற்பம் மூஞ்செலி வாகனம் பீடத்துடன் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. கருவறையின் நேர் பின்புறம் பெரிய லிங்கமாக மீனாட்சி சுந்தரேஸ்வர் சன்னதி அடுத்து மகாவிஷ்ணுவின் சன்னதி உள்ளது, வடமேற்கு மூலையில் பூரணை புஷ்கலை சமேத ஐயனார் உள்ளார். வழமையான இடத்தில் சண்டேசரும் அருகில் கிணறு ஒன்றும் உள்ளது. வடகிழக்கில் பைரவர் உள்ளார். காலை மாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோழங்கநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சிதிருவாரூர்