சொட்டால் வண்ணம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
சொட்டால் வண்ணம் விஸ்வநாதர் சிவன்கோயில்,
சொட்டால் வண்ணம், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கீவளூர் – தேவூர் சாலையில் இரண்டு கிமீ வந்தவுடன் வலது புறம் திரும்பும் ஒரு சிறிய சாலையில் ஒரு கிமீ சென்றால் சொட்டால் வண்ணம் உள்ளது. சூரசம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான் இறைவனை வேண்ட அவர் பதரி வனத்தில் சிவபூஜை செய்யுமாறு கூற, சிக்கலுக்கு அருகில் உள்ள கீழ்வேளூரில் சிவபூஜை செய்யும்போது அத்தலத்தைச் சுற்றிலும் ஐந்து / ஒன்பது தலங்களில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதில் இறைவன் சொல்லியவண்ணம் பூஜை செய்த ஊர் என்பதால் இது தற்போது சொட்டால்வண்ணம் என அழைக்கப்படுகிறது.
இங்கு கிழக்கு நோக்கியதாக சாலையோரத்தில் ஒரு கோயில் உள்ளது, ஊர் மக்கள் இதனை பிள்ளையார் கோயில் என்றே கூறுகின்றனர். இறைவன் – விஸ்வநாதர் இறைவி – விசாலாட்சி பழங்கோயில் இன்றில்லை, இது புதிதாக உருவாக்கப்பட்ட கோயில், கிழக்கு நோக்கிய இறைவன் விஸ்வநாதர், அவரின் முன்னர் ஒரு பெரிய முகப்பு மண்டபம் உள்ளது. அதில் கருவறை வாயிலில் விநாயகர் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். எதிரில் நந்தி உள்ளது. வடபுற சுவற்றோரம் அம்பிகை மற்றும் சண்டேசர் உள்ளனர். கருவறை சுற்றி கோஷ்டங்களே இல்லை. பூஜை யார் எப்போது எப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை காலை மாலை விளக்கு எரிகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சொட்டால் வண்ணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வேளாங்கண்ணி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி