சேமக்கோட்டை திருமூலநாதர் சிவன் கோயில்
முகவரி
சேமக்கோட்டை சிவன்கோயில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்
இறைவன்
இறைவன்- திருமூலநாதர். இறைவி -மரகதாம்பாள்
அறிமுகம்
சேமக்கோட்டை கிராமம் பண்ருட்டி- திருக்கோயிலூர் சாலையில் ஆறு கிமி தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே வேளாண்மையாகும். மக்கள் தொகை ஆயிரத்திற்கும் சற்று அதிகமாகலாம். தண்ணீர் ஆதாரமாக இரண்டு ஏரிகள் உள்ளன. விவசாயம், மீன் வளர்ப்பு ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது. ‘ ‘ கோவில்கள்-மாரியம்மன், அங்காளம்மன், பெரியாண்டவன், வீரன் மற்றும் வராகியம்மன் ஆகியன. நெல், கரும்பு,பருத்தி, வேர்கடலை,கம்பு, உளுந்து, பச்சை ஆகியன விளைகின்றன. பிரதான சாலையின் வடக்கில் சிதிலமாய் செங்கல் இடிபாடுகள் உள்ளனவே அது தான் பழைய சிவன் கோயில். சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மரகதாம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர் ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர், சேந்தமங்கலம் பகுதியில் நாடாண்ட காடவராய மன்னர்கள் விஜயநகர மன்னர் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டது. கி.பி.16 ம் நுாற்றாண்டில் இப்பகுதியில் ஆட்சிபுரிந்த விஜயநகர அரசரின் கல்வெட்டும், சோழர் கால கல்வெட்டுகள் மூலம் இக் கோவிலின் பழமை மற்றும் தொன்மையை அறிய முடியும் இறைவன்- திருமூலநாதர். இறைவி -மரகதாம்பாள் கிழக்கு நோக்கிய இறைவன், தெற்கு நோக்கிய இறைவி, விநாயகர், முருகன் சன்னதிகள் இருந்துள்ளன. இன்றோ மேல் விதானம் இடிந்து கிழே இப்போ விழவா, அல்லது நீ போனப்புறம் விழவா என கேட்பதுபோல் இருந்தது. இதோ இந்த சவுக்கு கம்புகள் விதான கருங்கல்லை இறைவன் மேல் விழாமல் இப்போதைக்கு தாங்கி நிற்கின்றன. அனைத்து தெய்வங்களும் காணமல் போய்விட இறைவனை விட்டு பிரியாத நந்திதேவர் மட்டும் நன்றிக்கடன் தேவராக இறைவன் முன்னால். இக்கோயிலின் எதிரில் ஒரு உயர்ந்த அதிட்டானத்துடன் ஒரு புதிய கட்டுமானம் நிற்கிறது, இறைவனை வெளியில் கொண்டு வந்து அதில் இருத்த வேண்டும் என எவரோ முயற்சி எடுத்திருக்க வேண்டும். தற்போது தென்புறம் ஒரு கடைக்கால் தோண்டப்பட்டுள்ளது அங்கு இறைவனை குடியேற்ற மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. வினைப்பயன் என்பது இறைவன் திருக்கோயிலுக்கும் உண்டு போலும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 years old
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேமக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி