சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
50. சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில்,
சேந்தங்குடி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
திருநாகேஸ்வரர்
இறைவி:
நாகவல்லி
அறிமுகம்:
பல சேந்தங்குடிகள் உள்ளதால் இந்த சேந்தங்குடிக்கு 50. சேந்தங்குடி என பெயரிடப்பட்டுள்ளது. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5-கிமீ வந்து ஊட்டியாணி-யில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம், மணக்கரை வழியாக 5-கிமீ வந்தால் 50.சேந்தங்குடி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களான சேந்தங்குடி பொய்கைநல்லூர், புத்தகரம். மூணும் ஒன்றோடொன்று ஒட்டிய ஊர்கள் தான். இந்த மூணு ஊர்களிலும் சிவன் கோயில்கள் உள்ளது.
சேந்தன்குடியில் இருந்து ராமநாதபுரம் எனும் சிற்றூர் செல்லும் சாலையில் ஒரு பெரிய குளத்தின் அருகில் இந்த சிவன் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். இறைவன் – திருநாகேஸ்வரர் இறைவி – நாகவல்லி.
அஷ்ட நாகங்களில் அனந்தன் எனப்படும் சேஷ நாகன் வழிபட்டதால் சேஷநாகன் குடி எனப்பட்டு இப்போது சேந்தங்குடி ஆனது. இப்படி ஒரு வரலாறும் சொல்லப்படுகிறது.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை கருவறை தனித்து தெற்கு நோக்கி உள்ளது. இடையில் நீண்ட தகர கொட்டகை போடப்பட்டு உள்ளது. அதில் நந்தி பலிபீடம் இறைவனை நோக்கி உள்ளது. கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் மஹாகணபதி வள்ளி – தெய்வானை சமேத முருகன், மகாலட்சுமி ஆகியோருக்கு தனி தனி சிற்றாலயங்கள் உள்ளன. முருகனை ஒட்டி ஒரு சிறிய மேடையில் ஒரு அம்பிகை சிலை உள்ளது யாரென தெரியவில்லை.
நாக தோஷம் திருமணம், குழந்தை பேறுக்கு தடையாக இருக்கக் கூடியது என்பார்கள். இறைவன் இறைவி இருவருமே நாகத்தின் திருநாமம் கொண்டு விளங்குவதால், தோஷம் கொண்டுள்ள அன்பர்கள் நாகதோஷ நிவர்த்திக்கு இத்தல இறைவனை அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும். வெளியுலக்குக்கு இவரின் பெருமை தெரியாததால் ஒரு கால பூஜை கோயிலாகவே உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேந்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி