Wednesday Jul 03, 2024

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொன்பள்ளி-609309. செம்பொன்னார்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-99437 97974

இறைவன்

இறைவன்: சுவர்ணபுரீஸ்வரர் இறைவி: மறுவார்குழலி

அறிமுகம்

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள மாடக்கோயில். பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னதி உள்ளது. மாடக்கோயில் அமைப்புள்ள இக்கோயிலில் பலிபீடம், நந்தி உள்ளன. மண்டபத்தில் சூரியமகா கணபதி, சூரியலிங்கம், சந்திரலிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர். கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சேத்ரகால பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து பிராமி, மககேஸ்வரி, கௌமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, விநாயகர், சாஸ்தா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பின்புறம் பிரகாச விள்ளையார், நால்வர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறார். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்று வித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.தாட்சாயிணியும், சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவனும் தாட்சாயிணியை மன்னித்து சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார்.

நம்பிக்கைகள்

எது வேண்டுமானாலும் கேட்கலாம். அனைத்தையும் நிறைவேற்றி தருகிறார். குறிப்பாக தியானப்பயிற்சி செய்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு தியானப்பயிற்சி ஆரம்பிப்பது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். சிவனின் சொல் கேட்காமல் பார்வதி தன் தந்தையின் யாகத்திற்கு செல்கிறார். இதனால் சிவன் பார்வதியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். எனவே முருகப்பெருமான் சிவன் வடிவில் தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துக்கூறினார். இதனாலேயே இங்குள்ள முருகன் கையில் அட்சய மாலையுடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் தான் சிவபெருமான் வீரபத்திரராக தோன்றுகிறார். ரதி, மன்மதனை தன் கணவனாக அடைந்தது“இத்தல இறைவனை வழிபட்டு தான். வட்டவடிவமான ஆவுடையாருள்ள இம் மூர்த்தி திருமாலால் பூஜிக்கப்பட்டவர். இரண்டு கரங்களே உடைய சுகந்த குந்தளாம்பிகை தேவிக்கு, புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்தளாகி, சுகந்தவன நாயகி, மருவார் குழலி என்ற திருநாமங்களும் உண்டு. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும்.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம். இந்த நாட்களில் விசேஷ பூஜைகளும், 9 நாள் பெருந்தேர் விழாவும் “சவுரமகோற்சவம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

காலம்

3000-4000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செம்பொனார்கோவில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top