Friday Jan 24, 2025

செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில்,

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் – 606701.

இறைவன்:

வேணுகோபால பார்த்தசாரதி

இறைவி:

பத்மாவதி ஆண்டாள்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் அமைந்துள்ள வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இதன் கட்டிடக்கலை மற்றும் அமைப்பு அண்ணாமலையார் கோயிலை ஒத்திருக்கிறது. ஸ்ரீ ராமர் வழிபட்ட விஷ்ணு கோவில் இது.

புராண முக்கியத்துவம் :

ராமாயண காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் கொல்லப்பட்டான். இதனால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார்.இதன்படி ராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தை போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்:

மனவியாதி உடையவர்களை இங்குள்ள ஆழ்வார்கள் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபட்டு, நோய் தீர வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தில் தடை உள்ள பெண்கள் காலை வேளையில் பெருமாளை சுற்றி வந்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக்கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர். ஏழை ஒருவனது தோஷத்தைப்போக்கி அவனுக்கு புதையலை காட்டிய வள்ளல் இந்த பெருமாள். சங்க காலத்தில் செங்கம் நகரை “செங்கண்’ என அழைத்தனர். இதை திம்மப்பன் ஆட்சி செய்த போது, “தளவா நாயக்கன்’ என்ற குறுநில மன்னன் கப்பம் வசூல் செய்ய செங்கண் நகருக்கு வந்திருந்தான். அப்போது இவனும் இவனது குடும்பத்தினரும் கட்டியதே இக்கோயில். 1000 ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கும் 60 அடி தொலைவிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சுரங்கப்பாதை இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் மன்னர்கள் இந்த பாதையை பயன்படுத்தி உள்ளனர்.

திருவிழாக்கள்:

வைகாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம் நடக்கிறது. திருவிழாவில் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 6ம் நாளில் பெருமாளும், ஆண்டாளும் யானை வாகனத்தில் அமர்ந்து மாலை மாற்றி கொள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செங்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top