Sunday Jun 30, 2024

சூரியக் கோவில், கொனார்க்

முகவரி

சூரியக் கோவில், கொனார்க், ஒடிசா – 75211

இறைவன்

இறைவன்: சூரியதேவன்

அறிமுகம்

ஒடிசா மாநிலம், கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ளது கொனார்க் சூரியக் கோவில். 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல அபூர்வ சிற்பங்கள் உள்ளன. கடற்கரையை ஒட்டியே இந்த கோவில் கட்டப்பட்டது. ஆனால் கடல் உள்வாங்கியதால் இப்பது இது கடலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் பிரமிக்கத்தக்க அதிசயமாக கூறப்படுவது மிதக்கும் சிலைகளே. சூரியனுக்காக கட்டப்பட்டன இந்த கோவிலின் பிரதான தெய்வம் சூரியன் தான். இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில். இது கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. “இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது” என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள். இக்கோயில் மொத்தமுமே ஒரு அறிவியல் பெட்டகமாகும். சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கும் இக்கோயில் ஒரு கால கடிகாரம் போல செயல்படுகிறது. கோனார்க் சூரிய கோயிலில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இருக்கின்றன.

புராண முக்கியத்துவம்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் ‘பிளாக் பகோடா’ (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம். இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன. நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு ‘உலகப் பண்பாட்டுச் சின்னமாக’ 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இக்கோயில் மொத்தமும் ஒரு தேர் வடிவில் இருக்கிறது. கருவறையை சுற்றிலும் கல்லில் வடிக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் இருக்கின்றன. இந்த 24 தேர் சக்கரங்களும் ஒரு நாளின் இருபத்திநான்கு மணிநேரத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது. 10அடி விட்டம் உடைய இந்த தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் ஏழு சக்கரக் கட்டைகள் இருக்கின்றன. இந்த கட்டைகள் வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கின்றன. கால ஓட்டத்தில் சூரிய கோயிலின் பெரும்பகுதி பல்வேறு காரணங்களினால் அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்போதிருக்கும் கோயில் கருவறையை ஒட்டியே 229அடி உயரமான விமான கோபுரம் இருந்ததாம். இப்பகுதியில் இருக்கும் வலுவில்லாத மண் தன்மையின் காரணமாக 1837ஆம் ஆண்டு அது இடிந்து விழுந்துவிட்டது. இந்த கோவிலை கட்டும் சமயத்தில் ஒவ்வொரு இரண்டு கற்களுக்கும் நடுவில் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல கோவிலின் மேற் கூரையில் சுமார் 52 டன் எடை கொண்ட மிகப்பெரிய காந்தம் ஒன்று பொறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சூரியன் சிலையிலும் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கச்சிதமான இரும்பு மற்றும் காந்த கலவையால் சூரியன் சிலையானது பல நூறு ஆண்டுகள் காற்றில் மிதந்தபடியே இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோவிலின் சில பகுதிகள் இடுத்துவிட்டதோடு சிலைகளும் காற்றில் மிதக்கவில்லை. கோவில் இடிந்ததற்கு முக்கிய காரணம் போர்திக்கீஸின் கப்பற்படை வீரர்களே என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் இந்த பகுதியில் துறைமுகம் இருந்துள்ளது. கோவிலும் கடலுக்கு மிக அருகில் இருந்ததால் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய காந்தத்தின் சக்தியால் கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து செல்ல சற்று இடையூறாக இருந்துள்ளது. காந்த சக்தியால் சிறு கப்பல்கள் கவிழ நேரிடுமோ என்று அச்சம் கொண்ட போர்திக்கீஸ் வீரர்கள் அந்த காந்தத்தை தகர்த்தெறிய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பின் தங்கள் திட்டத்தின் படியே காந்தத்தை தகர்த்தெறிந்ததாகவும் இந்த காரணமாக தான் கோவிலின் சில பகுதிகள் சிதலமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை செவி வழி செய்திகளே தவிர இதற்கு எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளின் போது சூரிய ஒளி நேரடியாக கருவறையின் மேல் விழுகும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு இக்கோயிலின் முன்பாக இருக்கும் ஏழு குதிரைகளின் சிற்பங்களையும் நாம் காணலாம். இக்கோயில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ‘மஹாசப்தமி விழா’ பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

ஒடிசா

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பூரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பூரி

அருகிலுள்ள விமான நிலையம்

புவனேஸ்வர் (IATA: BBI)

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top