சூடாமணி விகாரம், நாகப்பட்டினம்
முகவரி
சூடாமணி விகாரம், மேல்கோட்டைவாசல் , வ ஓசி நகர் நாகப்பட்டினம் தமிழ்நாட்டு 611003
இறைவன்
புத்தர்
அறிமுகம்
சூடாமணி விகாரம் என்பது தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு பௌத்த விகாரமாகும். மலாய் நாடு ( சுமத்ரா தீவு, நவீன இந்தோனேசியா) என்று இந்நாளில் குறிப்பிடப்படும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீவிஜயம் என்னும் பெயரால் பிரசித்தி பெற்று இருந்தது. அந்த நாட்டின் தலைநகரம் கடாரம் ஆகும். இதனை சைலேந்திர வம்சத்தினர் ஆண்டு வந்தனர் .
புராண முக்கியத்துவம்
இவ்வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் மன்னன் புகழ்பெற்று விளங்கினான். அவனது மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் (கி.பி.985-1014) ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான்.சீன அறிஞர்கள் யுவான் சுவாங், யீஜிங் போன்றோரின் பயணக் குறிப்புகளிலும், நினைவுக் குறிப்புகளிலும் ஸ்ரீ விஜய அரச வம்சத்தை தோற்றுவித்த சைலேந்திர வம்சத்தினர் மலாயா, ஜாவா, சுமாத்திரா மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்ததை உருதிப்படுத்துகிறார்கள். இவர்கள் கடல் கடந்து கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் தூரக்கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது தெரிய வருகிறது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்கோட்டைவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி