சித்தோர்கார் கும்பஷ்யாம் கோவில், இராஜஸ்தான்
முகவரி
சித்தோர்கார் கும்பஷ்யாம் கோவில், சித்தூகார் கோட்டை சாலை, சித்தோர்கார் கோட்டை கிராமம், சித்தோர்கார், இராஜஸ்தான் – 312001
இறைவன்
இறைவன்: விஷ்ணு இறைவி: பூதேவி, ஸ்ரீதேவி
அறிமுகம்
கும்பஷ்யாம் கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அவர் இங்கு வராகராக (அவரது பன்றி அவதாரம்) வழிபடப்படுகிறார். சித்தோர்கார் கோட்டைக்குள் உள்ள கும்ப கோவிலானது, முதலாம் மகாராணா சங்ராம் சிங்கின் மருமகள் மீராவின் வேண்டுகோளின் பேரில் இந்த கோவில் கட்டப்பட்டது.
புராண முக்கியத்துவம்
மகாராணா கும்பா, கும்பகர்ண சிங் என்றும் அழைக்கப்படுகிறார், இராணா மோக்கல் மற்றும் மகாராணி செளபாக்யா தேவியின் மகன் ஆவார். அவர் 1433 முதல் 1468 வரை மேவாரை ஆண்டார். மகாராணா கும்பா இசை மற்றும் கலை மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மீரா பாய் கிருஷ்ணரின் தீவிர பக்தர். அவர் 1513 இல் இராணா கும்பாவை மணந்தார், பின்னர் அவருடன் சித்தோர்காருக்கு சென்றார். அவள் வேண்டுகோளின் பேரில் கும்பஷ்யாம் கோவில் கட்டப்பட்டது. கும்பஷ்யாம் கோவில் முதலில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மகாராணா கும்பா பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டில் கோயிலைப் புதுப்பித்தார். அதன்பிறகு அவரது பெயரால் கோயில் மாற்றப்பட்டது. கோவில் சிற்பங்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்து மதத்தின் படி, பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதிகம். விஷ்ணுவின் பன்றியின் அவதாரம் அவரது தசாவதாரத்தில் ஒன்றாகும்.
சிறப்பு அம்சங்கள்
சித்தர்கர் கும்பா ஷ்யாம் கோவிலில் வராகரின் சிலை உள்ளது. இந்தோ ஆரிய கட்டிடக்கலை முறை இந்த கோவிலைக் கட்டுவதில் பயன்படுத்தப்பட்டது. இந்த கோவில் பிரதக்ஷிணபத், அர்த்த மண்டபம், முக மண்டபம், அந்தராளம் மற்றும் கர்ப்பகிரகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இக்கோயில் அதன் உட்புற கோபுரத்தில் பிரமிடு அமைப்பை கொண்டுள்ளது. கோவிலில் உள்ள வளைவுகள் மற்றும் வடிவங்களால் செதுக்கப்பட்டுள்ளன. உட்புறச் சுவர்களின் அழகு கடவுள்களின் சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சித்தோர்கார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சித்தோர்கார்
அருகிலுள்ள விமான நிலையம்
உதய்ப்பூர்