சிதம்பரம் வாரணீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/278288814_7258935340846180_1446796704064156677_n.jpg)
முகவரி :
வாரணீஸ்வரர் திருக்கோயில்,
சிதம்பரம் நகரம்,
கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்:
வாரணீஸ்வரர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், முப்பத்துஇரண்டு திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று தான் இந்த வாரணீஸ்வரர் கோயில் ஒன்று தில்லை பெருங்கோயிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஞானபிரகாசம் குளத்தின் கிழக்கு கரை பகுதியில் உள்ள அரங்கநாதன் நகரில் உள்ளது இந்த வாரணீஸ்வரர் கோயில். பேருந்து நிலையத்தில் இருந்து சின்னமார்க்கட் வழியாக ஞானபிரகாசம் குளத்தை அடையலாம்.
இங்கு சிறிய தெருவின் ஓரத்தில் மேற்கு நோக்கிய கோயிலாக உள்ளது, பெருங்கோயிலின் சுருக்கம் தான் இந்த கோயில். இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக வாரணீஸ்வரர் கருவறை கொண்டு உள்ளார். அருகில் தெற்கு நோக்கிய ஒரு மாடத்தில் விசாலாட்சியும், வடக்கு நோக்கிய ஒரு மாடத்தில் விநாயகரும் உள்ளனர். லிங்கமூர்த்தியும் விநாயகரும் மட்டுமே பழமையானவர்கள் என பார்த்தவுடன தெரிகிறது, வாரணன் என்பது கணபதியை குறிக்கும் கணபதிக்கும் இக்கோயிலுக்கும் என்ன சிறப்பு என்பதை அறியமுடியவில்லை. தென்கிழக்கு பகுதியில் கணபதிக்கு என்ன வேலை? எதுவும் அறியமுடியவில்லை.
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/277820589_7258936860846028_6228126928618505156_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278133927_7258937170845997_6841367859101303061_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278175060_7258936800846034_6024839763005177757_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278240710_7258936954179352_7083524628063947225_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278288814_7258935340846180_1446796704064156677_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278296307_7258935274179520_2141693646646903478_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278362058_7258936820846032_5088209635625827858_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி