Thursday Oct 10, 2024

சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்,

சிங்கப்பெருமாள் கோயில்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 202.

போன்: +91- 44-2746 4325, 2746 4441

இறைவன்:

பாடலாத்ரி நரசிம்மர்

இறைவி:

அஹோபிலவல்லி

அறிமுகம்:

      பாடலாத்ரி நரசிம்மர் கோயில் அல்லது நரசிம்மர் கோயில் (சிங்கப்பெருமாள் கோயில் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னை நகருக்கு அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிங்கபெருமாள் கோயிலில் அமைந்துள்ள விஷ்ணு (நரசிம்மர்) கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நரசிம்மர் என்றும் அவரது மனைவி லட்சுமி அஹோபிலவல்லி என்றும் வணங்கப்படும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாறைக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும் , இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர்.மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.

பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சம். மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. நரசிம்மர் கோயில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

நம்பிக்கைகள்:

கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக இங்கு சிறப்புபூஜை செய்யப்படுகிறது. திருவாதிரை, சுவாதி, நட்சத்திரத்தினரும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. கோயிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

            “பாடலம்’ என்றால் “சிவப்பு’ “அத்ரி’ என்றால் “மலை’. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் “பாடலாத்ரி’ என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும்.தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.

தோசை பிரசாதம்: திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும். சென்னை – திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. எஸ்.பி.கோவில்’ என்று சுருக்கமாக சொல்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலான இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்வீ றிருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை நீங்கும். இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில்’ என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். ஒரு தோசை விலை ரூ.25.

திருவிழாக்கள்:

சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிங்கப்பெருமாள்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top