சாத்தனூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
சாத்தனூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
சாத்தனூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614101.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும்சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் வெண்ணாற்று மேல் பாலம் ஒன்றுள்ளது. அந்த பாலத்தை தாண்டினால் வெண்ணாற்றின் தென் கரையில் சாத்தனூர் அமைந்துள்ளது. சாத்தனூர், காக்கையாடி, கோம்பூர் இவை எல்லாமே ஒன்றோடொன்று ஒட்டியபடி உள்ள ஊர்களாகும். பாலத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையில் பெரிய குளத்தின் கரையில் ஒரு சிவன்கோயில் உள்ளது. பழைய கோயில் சிதைவடைந்த பின்னர் இருந்த ஒற்றை லிங்கத்திற்கு ஒரு தகர கொட்டகை வேயப்பட்டு கோயிலாக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், பெரிய லிங்கமூர்த்தியாக இறைவன் ஏகாம்பரேஸ்வரர் உள்ளார். எதிரில் சிறிய நந்தி உள்ளது. கடந்த சில மாதங்களின் முன்னர் தான் குடமுழுக்கு செய்துள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி