கோவைப்புதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி பெருமாள்கோவில், கோயம்புத்தூர்
முகவரி :
கோவைப்புதூர் ஸ்ரீ வேணுகோபாலசுவாமி பெருமாள் கோவில்
28/29, சங்கர் நகர், பெருமாள் நகர்,
கோவைப்புதூர்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
தமிழ்நாடு 641042
இறைவன்:
ஸ்ரீ வேணுகோபாலசுவாமி பெருமாள்
இறைவி:
ஸ்ரீ ருக்குமணி, சத்யபாமா
அறிமுகம்:
இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் தெற்கு தாலுகாவில் கோயம்புத்தூர் நகருக்கு அருகில் உள்ள கோவைப்புதூர் நகரத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. திருவேங்கடவன் அறக்கட்டளையின் தனியார் அறக்கட்டளையால் இக்கோயில் நடத்தப்படுகிறது.
கோவில் கோவைப்புதூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் கோவைப்புதூர் சந்திப்பிலிருந்து மதுகரை வரை சுமார் 4 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் சங்கர் நகரில் (சிறுவாணி நகர் பின்புறம்) அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
இத்திருத்தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மைசூரை ஆண்ட யாதவ வம்சத்துத் மகாராஜாவால் கட்டபெற்றது என்று வரலாறு கூறுகிறது. இது கோயிலின் முன் அமைப்பாக கோட்டை விநாயகர் கோயில் உள்ளது. அதை வைத்துத் இந்த கிராமத்திற்கு அக்காலத்தில் கணபதி என்ற பெயர் வழங்க பெற்றுள்ளது. கி.பி. 1764ல் மாதையா என்ற உடையார் வம்சத்துத் அரசர் இத்திருத்தலத்தை புனருத்தாரணம் செய்துள்ளார் என்ற வரலாறுகளும் கல்வெட்டுகளும் கூறுகின்றன. யாதவ மன்னர் கட்டும்போது 5 கோயில்களை நிறுவி உள்ளார். 1. கணபதி, 2. கொள்ளோகாலம் (மைசூர்), 3. சத்யமங்கலம், 4. சலிவன் வீதி (கோவை), 5. பாலக்காடு (கேரளா) கோயில் பணிகளைச் செம்மையாகச் செய்ய தொடக்க காலத்தில் இருந்தே மைசூர் சீரங்கபட்டிணத்தில் உள்ள வைணவ பிராமணகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாரிசுதாரரைக் கூட்டி வந்து ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழிமுறையில் வந்தவர் இத்திருத்தலத்தின் பரம்பரை அறங்காவலர் பொறுப்பில் இந்த கோயில் நிலங்களை விற்று அதை திருத்தலத்தின் நிரந்தர முதலீட்டாகச் செய்துள்ளனர். இத்தலத்தில் தேரோட்டம் தெப்ப உற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. வைணவ திருத்தலங்களில் ஆழ்வார்களால் பாடபெற்றவை திவ்ய திருப்பதிகள் எனவும், பிறரால் பாடப்பெற்றவை அபிமான ஸ்தலங்கள் எனவும் கூறுவர்.
நம்பிக்கைகள்:
தைரியம் கிட்டிட வாக்கு மேன்மை ஓங்கப் பிரார்த்தனை செய்யலாம். பய உணர்வு, விஷ முறிவு, வாகன விபத்து, பிதுர்தோஷம், நினைத்த காரியம் வெற்றிபெற, மகப்பேறு, குழந்தை பிறப்பதற்கு இங்கு பிரார்த்திக்கன்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
மகப்பேறு வேண்டுவோர் மாதம்தோறும் திருவோணநட்சத்திரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு உற்சவர் சந்தான கிருஷ்ணருக்குப் பாயாசம் ஊட்டி விட்டு சேலை துடைப்பால் துடைத்துத் நம்பிக்கையுடன் வழிபட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறப்பது நிச்சயம். ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் சக்கரத்தாழ்வார் ஹோம பூஜையில் கலந்து கொண்டால் திருமணத்தடை அகலும், நோயற்ற வாழ்வு, தொழில் மேன்மை கிடைக்கும். மகாசுதர்சனம் ஆசி பெற்றால் குழந்தைகளுக்கு பய உணர்ச்சிச் குறையும். பிறந்த குழந்தைகளுக்கு துலாபாரம் நினைத்த பொருளில் கொடுக்கலாம். வியாதி நீங்கவும் வேண்டுதல் நிறைவேறவும் துலாபாரம் கொடுக்கிறார்கள். கோவையில் எந்தத் திருத்தலத்திலும் இல்லாத பிரார்த்தனை இங்கு உள்ளது. நாம் நினைத்த காரியம் நடைபெற பாசி அள்ளுதல் சிறப்பு தரும். பிரதிமாதம் பவுர்ணமி அன்று மாலை 6மணிக்கு சத்யநாராயணபூஜை நடைபெறுகிறது. செல்வம் செழிக்கச் சிறந்த பூஜையில் பங்கு கொள்ளலாம்.
திருவிழாக்கள்:
6 நாட்கள் பிரம்மோத்ஸவம், பவித்ரோத்ஸவம், ஸ்ரீ ஜெயந்தி (ஜன்மாஷ்டமி), வெங்கடேச ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசியுடன் கூடிய மார்கழி மஹோத்ஸவம், ஹனுமத் ஜெயந்தி மற்றும் சுதர்சன ஜெயந்தி ஆகியவை இங்கு கொண்டாடப்படுகின்றன.
Refer: https://tamilnadu-favtourism.blogspot.com/2021/11/venugopala-swamy-temple-kovaipudhur-coimbatore.html
காலம்
1200 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவைப்புதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்
Location on Map