Tuesday Jul 02, 2024

கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி :

அருள்மிகு பூவனாதர் திருக்கோயில்,

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் – 628501.

போன்: +91 4632 2520248

இறைவன்:

பூவனாதர்

இறைவி:

செண்பகவல்லி

அறிமுகம்:

  தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது. மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது.

புராண முக்கியத்துவம் :

ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகியோரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றார்.

                                பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு, தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார். வெள்ளிமலை வாமனன், நந்திதேவரின் சாபத்தால்  வெம்பக்‌கோட்டை ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் (கோவில்பட்டியையும்), அதில் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். உள்ளமுடையான் (புலவர் கி.பி.1029க்கு முற்பட்டவர்) என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

நம்பிக்கைகள்:

இங்கு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு, தீராத பிணி தீரும். மனம் போல் மணவாழ்க்கை அமையும்; குறைவில்லா வாழ்வும், குழந்தை பேறும் கிடைக்கும். விவசாய ‌செழிப்பு, வியாபார விருத்தி ஆகியவற்றுக்காவும் இத்தலத்தில் வேண்டிக்‌‌கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

மதுரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சன்னதி நுழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காணப்படுகின்றனர். மூல விக்ரகம் எப்படியுள்ளதோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள். இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது. சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் என பெயர் பெற்றார்.

திருவிழாக்கள்:

வசந்த உற்சவம் வைகாசி 10 தினங்கள். அம்பாள் வளைகாப்பு உற்சவம் (ஆடிப்பூரம்) அம்பாளுக்கான சிறப்புத் திருவிழா. நவராத்திரி புரட்டாசி 10 தினங்கள். திருக்கல்யாணத் திருவிழா 12 நாள் பெருந்திருவிழா. சித்திரைத் தீர்த்தம் தமிழ் புத்தாண்டு தினம். இந்த முக்கிய விழாக்கள் தவிர பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோவில்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top