Sunday Jun 30, 2024

கோவில்குளம் தென்னழகர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில்,

கோவில்குளம், பிரம்மதேசம் போஸ்ட்,

அம்பாசமுத்திரம் தாலுகா,

திருநெல்வேலி மாவட்டம்.

போன்: +91- 4634 – 251 705.

இறைவன்:

தென்னழகர் (விண்ணகர் பெருமாள்)

இறைவி:

 சுந்தரவல்லி (சௌந்தரவல்லி)

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தென்னழகர் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் தென்னழகர் (விண்ணகர் பெருமாள்) என்றும், தாயார் சுந்தரவல்லி என்றும் சௌந்தரவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம். உற்சவர் சௌந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கி.பி.10ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலில் ஷ்ரவணம் உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுந்தரராஜப் பெருமாள் அம்பாசமுத்திரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 5 கருட சேவையின் ஒரு பகுதியாகும்.

புராண முக்கியத்துவம் :

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

நம்பிக்கைகள்:

உள்ளம், உருவம் இரண்டும் அழகாக சவுந்தர்ராஜ பெருமாளிடம் வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்:

மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார். கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதியன்று ஒருநாள் மட்டும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன சட்டை அணிவிக்கிறார்கள். ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் மட்டும் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

காலம்

ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top