Sunday Nov 17, 2024

கோழியூர் ஆலந்துறைஈசர் சிவன் கோயில்

முகவரி

கோழியூர் ஆலந்துறைஈசர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 111.

இறைவன்

இறைவன்: ஆலந்துறைஈசர் இறைவி: சௌந்தர்யநாயகி

அறிமுகம்

பெண்ணாடம்- திட்டக்குடி சாலையில் , திட்டகுடிக்கு இரண்டு கிமி முன்னதாக உள்ளது கோழியூர் கிராமம். இங்கு கிராமத்தின் நடுவில் உள்ளது சிவன்கோயில். பல ஆயிரம் மக்கள் வசிக்கும் கிராமமாக இருந்தாலும் கோயில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஒருகால பூசை எனும் நூலிழையில் கோயிலின் உயிர் ஊசலாடிகொண்டிருக்கிறது. கிராம மக்களை மட்டும் நொந்து பயனில்லை, காரணம் காலகாலமாக பெரும்பான்மை சாதியினரை உள்ளே விட மறுத்து தடுத்த விளைவு அவர்கள் தங்களுக்கென்று சில தெய்வங்களை, கோயில்களை உருவாக்கிகொண்டனர். தற்போது சிறுபான்மை சாதியினர் ஊரை விட்டு போய்விட அவர்களது பராமரிப்பில் இருந்த கோயில்கள் பாழடைய ஆரம்பித்துவிட்டன. இக்கோயில்களை புதுப்பிப்பதனால் மட்டும் நிலை மாறிவிடாது, இவற்றினை மாற்றவேண்டுமானால் இந்து மதத்தின் தொன்மை, சிவனது சிறப்புக்கள், கோயிலும் அதன் அறிவியலும், கல்வெட்டுக்கள் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் இவற்றினை எல்லாம் மக்களது மனதில் பதியுமாறு கிராமம் தோறும் இந்து முன்னணி, உழவார இயக்கங்கள், பிராமண சங்கங்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். பின் தானே கிராம சிவாலயங்கள் புத்துயிர் பெறும். சரி வாங்க கோயிலை சுற்றி பார்ப்போம் .. கருவறை அதிட்டானம்,பிரஸ்தரம் வரை கருங்கல் திருப்பணியாகவும்,விமானம் செங்கல் பணியாகவும் உள்ளது கோட்டங்களில் விநாயகர், தென்முககடவுள், மகாவிஷ்ணு, பிரம்மன் துர்க்கை ஆகியோர் உள்ளனர். சிற்றாலயங்களில் விநாயகர், முருகன் உள்ளனர். இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார், அது போல் அவரது இடபாகத்தில் அம்பிகையும் கிழக்கு நோக்கி உள்ளார். சௌந்தர நாயகி என்பதை அழகிய காதலி அம்மன் என மொழி பெயர்ப்பு (?) செய்துள்ளனர். வடகிழக்கில் சிறு மண்டபத்தில் பைரவர், சந்திரன் உள்ளனர். கிழக்கில் பெரிய இருவாட்சி மரத்தின் கீழ் ஒரு லிங்கம் உள்ளது. வளாகம் முழுதும் இலவம் பஞ்சு மரங்கள் நிறைந்துள்ளன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெண்ணாடம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பெண்ணாடம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top