கோயிற்குளம் எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
கோயிற்குளம் எழுமேஸ்வரமுடையார் திருக்கோயில், கோயிற்குளம் – பண்ணாள் அஞ்சல், திருத்துறைப்பூண்டி வழி, வேதாரண்யம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614707.
இறைவன்
இறைவன்: எழுமேஸ்வரமுடையார் இறைவி: பாலினும் நன்மொழியாள்
அறிமுகம்
கோயிற்குளம் எழுமேசுவரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். வேதாரண்யம் வட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் ஆயக்காரன்புலத்தை அடுத்து பஞ்சநதிக்குளம் 4ஆவது சேத்தி என விசாரித்து கோயிலை அடையலாம். தளிக்குளம், மக்கள் வழக்கில் ‘கோயிற்குளம்’ என்று வழங்குகிறது. இங்குள்ள இறைவன் எழுமேஸ்வரமுடையார் ஆவார். இறைவி பாலினும் நன்மொழியாள் ஆவார். திருச்சுற்றில் ஆதி விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரியன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோயிற்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி