கோமல் அழகியநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
கோமல் அழகியநாதர் சிவன்கோயில், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609805.
இறைவன்
இறைவன்: அழகியநாதர்
அறிமுகம்
ஹச்தவர்ண ஜோதி எனப்படும் கோமளிய ஜோதியாக இறைவன் காட்சியளித்ததால் கோமல் என இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. கிருபாகூபேஸ்வரர், அமிர்தேஸ்வரர் மூன்றாவதாக இந்த அழகிய நாதர் கோயில். கோமல் ஊரின் தென் கிழக்கு பகுதியில் சித்தம்பூர் செல்லும் சாலையில் பெரிய குளத்தின் மேற்கு கரையில் உள்ளது இந்த அழகிய நாதர் கோயில். இக்கோயிலும் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவே சொல்கின்றனர். எனினும் சரியான தகவல்கள் ஏதுமில்லை. கிழக்கு நோக்கிய பெரிய கோயில் கருவறை அர்த்த மண்டபம், முகப்பு மண்டபம் என அனைத்தும் கருங்கல் பணிகள். கருவறை விமானம் மட்டும் செங்கல் பணியாக உள்ளது. காலம் எனும் காலனின் முன்னர் பராமரிப்பில்லாத மனிதர்களின் கட்டுமானங்கள் நிற்குமா? காலப்போக்கில் கவனிப்பார் இன்றி கோயில் சிதைவடைந்து சுவர்கள் விரிசல்கள் விட்டு சரிந்து கிடக்கிறது.
புராண முக்கியத்துவம்
முகப்பு மண்டபத்தில் மிகபெரிய லிங்கம் ஒன்று ஒற்றை காலில் நிற்கிறது. ஆம் பிரம்ம பாகம் வெளியில் தெரிய நடுவில் உள்ள ஆவுடையார் பாகம் உடைந்து காணப்படுகிறது. அந்தரத்தில் லிங்கம் உள்ளது போல் காணப்படுகிறது. அருகில் சண்டேசர் சிலை ஒன்று இருத்தப்பட்டுள்ளது. கருவறை உள்ளே நடுத்தர அளவுடைய லிங்கம் ஒன்று உள்ளது. அவரே எம்பெருமான் அழகிய நாதர் எனப்படுகிறார். அவரின் எதிரில் ஒரு நந்தி உள்ளது. இறைவியின் சன்னதியோ கருவறையோ காணப்படவில்லை. பல நூறு ஆண்டுகளாக கம்பீரமாக நின்றிருந்த கோயில் இதோ நம் காலத்தில் சிதைந்து கூனி குறுகிக்கொண்டிருக்கிறது. மன்னர் மானியங்களை தின்று தீர்த்தோம், கோயில் குடிகளை மதிக்காமல் இகழ்ந்தோம், கடவுளை திட்டியவனை வாய் பிளந்து ரசித்தோம் அவன் பேச்சை கேட்டு திருமேனிகளை உடைக்கவும் துணிந்தோம், நீறு பூசுவதும், திலகமிடுவதும் கேவலம் என்று பிள்ளைகள் சொல்வதை கேட்டுக்கொண்டு வாய்மூடி மௌனமாக இருந்தோம். பாடினாலும் கேட்டாலும் உடற்பிணி மனக்குறை நீக்கும் பதிகங்களை மறந்தோம். நம் கோயில் திருப்பணியை, நம் காசில் செய்ய துரைமார்களுக்கு பாத பூஜை செய்து அனுமதி கேட்டோம். பல படிநிலைகள் கொண்ட மதத்தை துறந்தோம். வலைவீசி மீன் பிடிப்பது போல் இந்துக்களை மற்ற மதத்தினர் பிடித்து செல்ல இடம் கொடுத்தோம். நாம், நம் குடும்பத்துடன் இறை நம்பிக்கை வைத்து நித்தம் கோயிலுக்கு செல்லாவிடில், வரும் சந்ததிக்கு கோயில்கள் இருக்காது, இருப்பவற்றில் பூஜை செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள், சரிந்து விழுந்த கோயில் கற்களும் சாலைக்கு ஜல்லியாக்கப்படும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி