கோட்டயம் திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில், கேரளா
முகவரி :
கோட்டயம் திருவார்ப்பு கிருஷ்ணர் கோயில்,
திருவாரப்பு, கோட்டயம் நகரம்,
கோட்டயம் மாவட்டம்,
கேரளா – 686020.
இறைவன்:
கிருஷ்ணர்
அறிமுகம்:
திருவார்ப்பு – கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். கேரள மாநிலம், கோட்டயம் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது, மேலும் இது மீனச்சில் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு நன்கு அறியப்பட்டதாகும் (வார்ப்பு என்பது கொத்தனார்கள் பயன்படுத்தும் வார்ப்பு. மணி-உலோக பாத்திரங்களை உருவாக்க). திருவார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; இது கேரளாவில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும் மற்றும் குறைந்தது 1500 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணரின் புகழ்பெற்ற பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள கல்வெட்டு, இக்கோயில் கி.பி 850 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது, மேலும் இந்த ஆலயம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் விளக்கெடுப்பு திருவிழாவின் போது ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது.
புராண முக்கியத்துவம் :
பன்னிரண்டு ஆண்டு வனவாச காலத்தின் போது வழிபடுவதற்காக, தனது உருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் கொடுத்திருந்தார். பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். அவர்கள் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர். சிலையைப் பெற்றுக் கொண்ட சேர்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.
நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர், அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரை வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது. படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன. கம்சனைக் கொன்று விட்டு, மிகுந்த கோபத்துடனும், அதிகப் பசியுடனும் இருந்த கிருஷ்ணர் தோற்றமாக இச்சிலை கருதப்படுகிறது. எனவே ஆலயத்தில் அதிகாலை வேளையில், மூலவருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்தி அவருடைய கோபம் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது பசியைத் தீர்க்கும் வகையில் அவருக்கு உசா பாயசம் எனும் உணவு படைக்கப்படுகிறது. அதன் பிறகே, உடல் பகுதி உலர்த்தப்படுகிறது.
இந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாலை வேளையில் கோவில் திறக்கப்படும் போது, அர்ச்சகர் கோடரி ஒன்றை வைத்துக் கொண்டே கோவில் நடையைத் திறக்கிறார். கோவில் பூட்டைத் திறக்கத் தாமதம் ஏற்பட்டால், அவர் கையில் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு கதவை உடனடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பசியுடன் இருக்கும் கிருஷ்ணருக்குக் கால தாமதமின்றி, உணவு படைத்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.
இந்து சமயக் கோவில்கள் அனைத்தும் சூரிய கிரகண வேளைகளில் மூடப்பட்டு விடும். அதே போன்று, இக்கோவிலும் ஒரு முறை சூரிய கிரகணத்தின் போது மூடப்பட்டது. கிரகணக் காலம் முடிந்த பிறகுக் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது மூலவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்து போயிருந்தது. அதனைக் கண்ட அர்ச்சகரும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிசங்கரர், இங்கிருக்கும் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்றும், இனி கிரகண வேளைகளில் கோவிலை அடைக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார். அன்றில் இருந்து கிரகணத்தின் போது இத்தலம் மூடப்படுவது இல்லை. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்நாளில் பசிப் பிணி ஏற்படாது என்கிறார்கள். இதற்காகவே, இக்கோவிலில் இரவு வேளையில் கோவிலின் நடைசாத்துவதற்கு முன்பாகப் அர்ச்சகர், ‘இங்கு யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ எனக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
திருவிழாக்கள்:
மேடம் மாதத்தின் முதல் பத்து நாட்கள் கோயில் திருவிழா. (ஏப்ரல்-மே).பத்தாவது நாளில் குருவாயூரில் உள்ள யானைகளின் இனம். பண்டிகைக் காலங்களில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் கிருஷ்ணர் போல் வேடமணிந்து காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனுக்கு தீபம் ஏற்றுவார்கள். மாதத்தின் பத்தாம் நாள் சூரியன் மறையும் போது, அவரது கதிர்கள் கருவறைக்குள் நுழைகிறது, இது பதம் உதயம் என்று குறிப்பிடப்படுகிறது.
அஷ்டமி ரோகிணியின் போது கிருஷ்ணரின் பிறந்தநாள் இந்தக் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஞாயிறு மற்றும் வியாழன் கிழமைகள் விசேஷமானவை மற்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
இந்த கோவிலின் மற்றொரு விசேஷமான கொண்டாட்டம் புல்லாட்டு பூஜை ஆகும், கதை என்னவென்றால் புள்ளட்டு வீட்டில் குழந்தை இல்லாத பணக்கார நாயர் ஒருவர் இருந்தார். அவர் தனது செல்வங்கள் அனைத்தையும் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்க விரும்பினார், மேலும் தனது நினைவு நாளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜோதிடர்கள் கடவுளை கலந்தாலோசித்தபோது, அவருடைய சம்மதம் கிடைத்தது. தை பூச நாளில், புல்லாட்டு நாயர் கோவிலுக்குள் வந்து, பொக்கிஷங்களின் சாவிகள் மற்றும் அவரது அனைத்து சொத்துகளுக்கான ஆவணங்கள் உட்பட அனைத்து செல்வங்களையும் இறைவன் முன் வைத்தார். பின்னர் அவர் இறைவனுக்கு சாஷ்டாங்கமாக வணங்கினார், அப்போது அவர் இறந்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் அவர் இறப்பதற்கு முன் ஒரு நாள் மூன்று சிறப்பு பூஜைகளும், இறந்த நாளில் பதினைந்து சிறப்பு பூஜைகளும் அவர் பெயரில் நடத்தப்பட்டு புல்லாட்டு பூஜை என்று குறிப்பிடப்படுகிறது. பால் பாயசம், நெய் பாயசம், அப்பம் போன்றவை இறைவனுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சதுர்ச்சாதம் என்ற சிறப்புப் பிரசாதமும் உண்டு.
காலம்
கி.பி 850 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவார்ப்பு
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோட்டயம்
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி