கூத்தூர் ஸ்ரீதர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கூத்தூர் ஸ்ரீதர்மபுரீஸ்வரர் சிவன்கோயில்,
கூத்தூர், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
ஸ்ரீதர்மபுரீஸ்வரர்
இறைவி:
ஸ்ரீதர்மசம்வர்த்தினி
அறிமுகம்:
திருவாரூரின் கிழக்கில் உள்ள கீழ்வேளூருக்கு சற்று முன்னதாக குருக்கத்தி எனும் ஒரு சிற்றூர் இதற்க்கு அரை கிமீ தெற்கில் உள்ளது கூத்தூர். திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு ஊர்களும் ஒரு சிவாலயத்தை கொண்டிருக்கின்றன அல்லது கொண்டிருந்தன. அப்படி ஒரு சிவாலயம் தான் இந்த ஊரை அலங்கரித்தது. சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் ஒன்று தற்போது உள்ளே செல்ல வழி கூட இல்லாத நிலையில் மாற்று மதத்தினர் ஆக்கிரமித்து விட்டனர். தற்போது கோயிலின் பின்புறம் உள்ள இந்துக்கள் தெரு வழி பின்புறமாக செல்ல வழி ஏற்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய ஒரு கருவறை, அதில் சிவனார் வீற்றிருக்கிறார். அப்படிஎன்றால் அருகில் தெற்கு நோக்கிய கருவறை இருக்க வேண்டுமே! ஆனால் அது இருந்த தடம் கூட இன்றில்லை.
இறைவனின் கருவறை ஆயிரமாயிரம் அச்சுக்கல் எனப்படும் மெல்லிய செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு முகப்பு அர்த்தமண்டபம் உள்ளது. அது கூம்புவடிவ கூரை கொண்டுள்ளது. அத்தனையும் இன்று வேரோடி சிதைந்து நிற்கிறது. இந்த மண்டபமும் மரம், செடி கொடிகளோடு விரிசலடைந்து, எந்நேரமும் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது. துணைக்கோயில்களில் இன்று விநாயகர் சன்னதி மட்டுமே சிதைவுடன் காணப்படுகிறது. மற்றவை செங்கல் கூட இல்லை. இறைவன்-ஸ்ரீதர்மபுரீஸ்வரர் இறைவி – ஸ்ரீதர்மசம்வர்த்தினி.
இறைவன் முன்னர் ஒரு தகர கொட்டகை போடப்பட்டுள்ளது. அதில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார். அம்பிகை தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை நீண்ட ஒரு மேடை கட்டி அதில் வைத்துள்ளனர். விநாயகர் வாயிலில் துர்க்கை உள்ளார். தனித்த ஒரு சதுரபீட லிங்கமும் ஒரு தகர கொட்டகையில் உள்ளது. ஆலயத்தின் தென்புறத்தில் கோயில் தீர்த்தம் தற்போது இக்கிராமத்தில் பதின்மூன்று இந்து குடும்பங்கள் மட்டுமே உள்ளனர். பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் எஞ்சியுள்ள இக்கோயிலை மீட்டெடுத்து ஒரு நந்தவனம் ஒன்றும் அமைத்துள்ளனர்.
பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ நாள்களில் பக்தர்கள் வந்து வழிபடுவதற்கேற்ப சிவாச்சாரியாரை வரவழைத்துப் பூஜை செய்கின்றனர். அதற்குமேல் திருப்பணி, குடமுழுக்கு நடத்த வருவோர் போவோரிடமெல்லாம் விண்ணப்பம் வைக்கின்றனர். பாண்டவர்கள் கானகவாழ்க்கையில் பல தலங்களில் வழிபாடு செய்தனர். அப்படி தருமர் சிவபூஜை செய்த தலம் இது என்கின்றனர். தர்மர் பூஜித்த இந்த லிங்கமூர்த்தியை வணங்கி வழிபட்டால், சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை செழித்து ஓங்கும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி