கூத்தூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கூத்தூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
கூத்தூர், பூதலூர்வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613203.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
திருவையாற்றில் இருந்து மேற்கு நோக்கிய சில்லென்ற காவிரிக்கரை சாலை. (ஒரு காலத்தில் சோழர்களின் குதிரைக்காவல் படை சாலை) திருக்காட்டுப்பள்ளி 4 கிமீ என வழிகாட்டிபலகை சொல்ல, கூத்தூர் என மற்றொரு பலகை சொல்ல கூத்தூர் தர்மசாஸ்தா கோயிலுக்கு வடக்கில் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தர்மசாஸ்தா கோயிலும் சிறப்பானது தான். சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் தவிர கிராம தெய்வமாக கருதப்படும் அய்யனார் என்னும் தர்மசாஸ்தா ஆலயங்களும் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன.
அக்ரஹார தெருவின் கடைசியில் சிறிய காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அமைதியான அக்ராஹார தெரு, சற்றே வீடுகள் புதுவடிவம் காண தொடங்கி உள்ளது எனலாம். தெருவின் கடைசியில் தனியான ஒரு தோப்பு போன்ற சூழலில் இறைவன் கருவறை கொண்டுள்ளார்,
இறைவன் – காசிவிஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி
காசியில் இருந்து கொணரப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ள இறைவன் சிறிய வடிவில் உள்ளார் அவரது கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன், அருகில் ஒரு மேடையில் சண்டேசர் மற்றதும் சில மூர்த்திகள் உள்ளன. அதே போல் அம்பிகையும் தனித்த தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கிழக்கில் ஒரு சிறிய கிணறும் உள்ளது. பெரிய அரசமரங்கள் இரண்டும் உள்ளன. அவற்றை வைத்து பார்த்தால் நூறாண்டுகளை கடந்த பழமை வாய்ந்த கோயில் எனலாம். காலை மாலை மற்றும் சிறப்பு நாட்களின் பூஜையை குறைவில்லாமல் ஏற்றுக்கொண்டு எம்பெருமான் அருள்பாலித்துவருகிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி