குரும்பேரி அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/278665870_7302169479856099_6570024063700392746_n.jpg)
முகவரி :
குரும்பேரி அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில்,
குரும்பேரி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
அருணாச்சலேஸ்வரர்
இறைவி:
உண்ணாமுலை அம்மன்
அறிமுகம்:
திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரின் வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த குரும்பேரி. வளப்பாற்றின் தென் கரையில் உள்ளது இவ்வூர். ஊரின் ஈசான்யத்தில் தனித்துள்ளது சிவன்கோயில். ஒரு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார் இறைவன் அருணாச்சலேஸ்வரர். இறைவி உண்ணாமுலை அம்மன் தெற்கு நோக்கியுள்ளார். கருவறை வாயிலில் விநாயகரும், முருகனும் உள்ளனர். நந்தி இறைவன் எதிரில் உள்ள மண்டபத்தில் இறைவனை நோக்கியுள்ளார். மண்டபத்தின் ஒரு மூலையில் சிறியதாக ஒரு மகாவிஷ்ணு சிலை உள்ளது. வடகிழக்கில் ஒரு தனி மாடத்தில் மேற்கு நோக்கிய பைரவர் உள்ளார். மண்டப முகப்பில் இறைவன் இறைவியும் அமர்ந்திருக்கும் சுதை சிற்பம் அழகு செய்கிறது. கட்டி முடித்து இரண்டானதாக கல்வெட்டு சொல்கிறது.
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278402643_7302169416522772_233576957652885021_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278443743_7302169726522741_8330867390432948359_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278662092_7302169373189443_6122650161201956119_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278796827_7302169239856123_3473173916453811763_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278913612_7302169279856119_3246062114520786666_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278924900_7302169853189395_5635605405621241406_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/278665870_7302169479856099_6570024063700392746_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/279060482_7302169659856081_7118315831718563384_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குரும்பேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி