கீழகண்ணாப்பூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
கீழகண்ணாப்பூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில்,
கீழகன்றாப்பூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610207.
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
பர்வதவர்த்தினி
அறிமுகம்:
திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்கு இடதுபுறம் பிரியும் சாலையில் தென்மருதூர் வந்து, அதற்கு அடுத்து இடதுபுறம் கோயில்கண்ணாப்பூர் இடப்புறமாக பிரியும் சிறிய சாலையில் ½ கிமீ சென்றால் கீழகன்றாப்பூர். தற்போது கீழகண்ணாப்பூர் எனப்படுகிறது. இது ஒரு சிறிய சிவன்கோயில், கிழக்கு நோக்கியது, இறைவன் பசுபதீஸ்வரர் இறைவி பர்வதவர்த்தினி இறைவன் கிழக்குநோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் சன்னதி கொண்டுள்ளனர். நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக இறைவன் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். சண்டேசர் வழமைபோல் கோமுகத்தருகே உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழகண்ணாப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி