கார்நாதன்கோயில் கனகபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கார்நாதன்கோயில் கனகபுரீஸ்வரர் சிவன்கோயில்,
கார்நாதன்கோயில், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
இறைவன்:
கனகபுரீஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாங்குடியின் மேற்கில் செல்லும் புனவாசல் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் கார்நாதன்கோயில் உள்ளது. இவ்வூரில் பிரதான சாலையை ஒட்டி கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது, கிராமம் சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது. இறைவன் – கனகபுரீஸ்வரர் இறைவி – மீனாட்சி கோயிலின் தென்கிழக்கில் கோயில்குளம் உள்ளது. கிழக்கு நோக்கிய இரிவன் கருவறை அதில் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக கனகபுரீஸ்வரர் உள்ளார். முகப்பு மண்டபம் ஒன்றுள்ளது அதில் தெற்கு நோக்கியபடி இறைவி மீனாட்சி உள்ளார். அம்பிகை வலது கையில் மலரையும், இடது கை கடி ஹஸ்தமாகவும் கொண்டு அழகாக உள்ளார்.
கருவறை வாயிலில் இருபுறமும் மாடங்கள் உளளன. வலதுபுற மாடத்தில் சிறிய அளவிலான முருகன் வள்ளி தெய்வானை உள்ளனர். முகப்பு மண்டபம் தாண்டி வெளியில் நந்தி ஒரு சிறு மண்டபம் கொண்டுள்ளார் பலிபீடமும் ஒரு கல்வெட்டும் அதில் இருக்க காணலாம். கருவறை கோட்டங்கள் என இல்லாமல் தென்முகன் சுவற்றோரம் தெற்கு நோக்கி உள்ளார். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். வடகிழக்கில் அழகான வடிவுடைய பைரவர் தனி சன்னதியில் உள்ளார். அருகில் ஒரு ஆவுடையாரின் பாகம் ஒன்று தனியாக கிடக்கிறது. இதன் அருகில் ஒரு தீர்த்தகிணறு மூடப்பட்டு கிடக்கிறது. குடமுழுக்கு கண்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன, பூஜை நேரம் வழிபாடுகள் பற்றி அறியமுடியவில்லை, பிரதோஷம், அன்னாபிஷேகம் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. கூடுதல் பராமரிப்பு தேவை என பார்த்த பார்வையில் தெரிகிறது. முகப்பு மண்டபத்தின் மேல் ஆலயமணி ஊமை வவ்வாலாக தொங்கி கொண்டிருக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கார்நாதன்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி