காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
காரையூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாருரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரியில் இருந்து நாகூர் சாலையில் 5 கிமீ சென்றால் காரையூர் நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஊர் 2 கிமீ தூரத்தில் உள்ளது. ஊரின் வடகிழக்கில் மேற்கு நோக்கிய சிவாலயமாக அமைந்துள்ளது இக்கோயில். இறைவன் அகத்தீஸ்வரர் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அழகிய ஒரு நந்தி இறைவன் முன்னம் ஒரு மண்டபத்தில் உள்ளார். இறைவி தெற்கு நோக்கியபடி சௌந்தரநாயகி எனும் பெயர் கொண்டுள்ளார். தென்மேற்கில் இடம்புரி விநாயகர் வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் சூரியன் பைரவர் உள்ளனர். கருவறை கோட்டத்தில் வடக்கில் துர்க்கை தென்புறம் தனித்த மண்டபத்தில் தக்ஷணமூர்த்தி உள்ளார். பழமையான ஆலயத்தின் சிதைவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட புதியதொரு ஆலயமாக உள்ளது.
புராண முக்கியத்துவம் :
கயிலையில் இறைவனின் திருமண வைபவம் நடைபெற்றபோது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து பூமி சமநிலை தவறியது. பூமியை சமநிலைக்குக் கொண்டு வர, இறைவனின் கட்டளையின்படி தென்னகம் புறப்படுகிறார் அகத்தியர்தான் பூஜிக்கும் இடங்களிலெல்லாம் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்கவேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. தென்திசை புறப்பட்ட அகத்திய முனிவர், தாம் அன்றாடம் பூஜித்த இடங்களிலெல்லாம் ரிஷபாரூட காட்சியை தரிசிக்க விரும்பினார். அதன் பலனாக எண்ணற்ற திருத்தலங்கள் தோன்றின. நமக்கெல்லாம் அருள்புரிய வேண்டும் என்பதற்காக அகத்தியரையே மறைமுகமாகப் பயன் படுத்திக் கொள்ளவும் செய்தார். அவையெல்லாம் அகத்தீஸ்வரம் எனப்பட்டது, இவை 163 என ஒரு தோராய கணக்கு. அப்படி அமைந்த திருத்தலங்களில் ஒன்றே இந்த காரையூர்.














காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி