Friday Jun 28, 2024

காரியமங்கலம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

காரியமங்கலம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,

காரியமங்கலம், மன்னார்குடி வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 611109.

இறைவன்:

அகத்தீஸ்வரர்

இறைவி:

சௌந்தர்ய நாயகி

அறிமுகம்:

காரி திருமாலின் பெயர்; திருமாலின் அவதாரமான ராமர் இங்கு வந்து சீதாபிராட்டியுடன் வழிபட்டதால் காரிமங்கலம் எனப்படுகிறது. காரி என்னும் கருங்குருவி வழிபட்டதால் காரிமங்கலம் எனப்படுகிறது. காரி என்றால் கருமை நிறம் கொண்ட சனி பகவானையும் குறிக்கும். இவர்கள் வழிபட்டதால் இந்த ஊருக்கு காரி மங்கலம் எனப்படுகிறது. இந்த மூன்றையும் தாண்டி ஒரு காரணம் உள்ளது அது என்னவென்றால், அகத்தியரால் இந்த தலத்தில் தான் காரிய சித்தி மந்திரம் முதன் முறையாக அருளப்பட்டது என்பது தான். அதனால் இவ்வூருக்கு காரிய சித்தி மங்கலம் என பெயர்; தற்போது காரிய மங்கலம் எனப்படுகிறது.

இந்த காரியமங்கலம் கிராமம், மன்னார்குடியின் நேர் கிழக்கில் உள்ள திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் கரையிலே சென்று இருள்நீக்கியின் முன்பு கோரையாற்றை தாண்டி 1 ½ கிமீ வடக்கில் சென்றால் காரியமங்கலம் அடையலாம். வடபாதிமங்கலம் பக்கமிருந்து தெற்கில் 5 கிமீ தூரம். சிறிய அழகிய நெல்வயல் சூழ்ந்த கிராமம். இங்கு பெரியதொரு குளத்தின் கீழ் கரையில் தான் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.

அகத்தியர் பரதகண்டத்தின் தென்பகுதிக்கு செல்ல பணிக்கப்பட்ட போது வழியில் பல தலங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார், அதில் ஒன்று இந்த காரியமங்கலம். அப்போது அருளியதுதான் காரிய சித்தி மந்திரம் இதனை மெய்பிக்கும் விதமாக இங்குள்ள விநாயகருக்கு காரியசித்தி விநாயகர் எனபெயர். இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி – சௌந்தர்ய நாயகி

புன்னகை பூத்த முகத்தவளாக அம்பிகை இருப்பதால் சௌந்தரநாயகி என பெயர். அம்பிகை மட்டுமல்ல அவரது மைந்தர்களும் அழகிய திருமேனியினராக இங்கே குடி கொண்டுள்ளனர். மயிலுடன் உள்ள முருகன் அப்படி ஒரு அழகு. அகத்தியரும் கையில் சிறிய கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார். கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளை முடிக்க வேண்டும், குடமுழுக்கும் நடத்தவேண்டும்.

நம்பிக்கைகள்:

இத்தல இறைவனை குழந்தை வரம், வேலை கிடைக்க வேண்டுபவர்கள் செவ்வாய் கிழமைகளிலும், உடல்நலத்தில் பிரச்னை உள்ளவர்கள் சனிக்கிழமையிலும் வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என கூறுகின்றனர். இக்கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது என கூறுகின்றனர். இதனால் தீர்த்தஷேத்திரம் எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரியமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top