காட்டூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
காட்டூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில், காட்டூர், வழி திருவாரூர் திருவாரூர் மாவட்டம் – 610104
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அபிராமியம்மை
அறிமுகம்
காட்டூர் சுந்தரேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் திருவாரூருக்கு 5 கிமீ தொலைவில் காட்டூர் உள்ளது. இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது. இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அபிராமியம்மை ஆவார். திருச்சுற்றில் சுப்பிரமணியர், பைரவர், சூரியன், விநாயகருக்கான சன்னதிகள் உள்ளன. இடது புறத்தில் இறைவி உள்ளார். இத்தலம் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காட்டூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி